விலை மலிவான மிதிவண்டி தண்ணீர் பம்பு..!

0
5351

தனது ஊரின் சக விவசாயிகள் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச, அதிக எடையுள்ள தண்ணீர் பம்பை தூக்கிச் செல்ல சிரமப்படுவதை மெக்கானிக்காக பணிபுரியும் கணேஷ் அடிக்கடி பார்ப்பதுண்டு. அந்த தண்ணீர் பம்பின் எடை மட்டும் சுமார் 60 கிலோ இருக்கும். இதனை தூக்கிச் செல்லும் போது பல விவசாயிகளுக்கு காயங்களும் ஏற்படுவதுண்டு. இந்த பம்புகளை வாகனங்கள் மூலம் விவசாய நிலங்களுக்கு கொண்டு சென்றால், பயிர்களை சேதமடையும் சூழலும்  இருந்தது.

எனவே இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண வேண்டும் என கணேஷ் யோசிக்கத் துவங்கினார். அப்போது மிதிவண்டி ஒன்றை பார்த்ததும், கணேஷுக்கு ஒரு யோசனை பிறந்தது. இந்த மிதி வண்டியை தண்ணீர் பம்புகளை எடுத்துச் செல்லும் வகையில் மாற்றி அமைத்தால் என்ன? என கணேஷ் களத்தில் இறங்கினார்.

பல சோதனைகளுக்கு பிறகு முன் பகுதி மிதி வண்டியாகவும், பின் பகுதி மோட்டார் சைக்கிளாகவும் உள்ள வாகனம் ஒன்றை உருவாக்கினார். தண்ணீர் பம்பை அந்த மிதிவண்டியில் பொறுத்தினார். இந்த மிதிவண்டியின் அகலம் குறைவு என்பதால், வயலுக்குள் நடப்பதற்கான இடத்தின் வழியாக மோட்டாரை கொண்டு செல்ல முடியும். மோட்டார் ஓடும் போது ஏற்படும் அதிர்வுகளை, மிதிவண்டியின் பின் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள் டயர் தாங்கிக் கொள்ளும்.

இதன் மொத்த எடை 75 கி.கி. இதில் தண்ணீர் பம்பின் எடை மட்டும் 60 கி.கி. தொடர் சோதனைகளுக்கு பின், இந்த மிதிவண்டி தண்ணீர் பம்பு திட்டம் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது வரை  40 மிதிவண்டி மோட்டார் பம்புகளை தயாரித்து, அவற்றை தலா 1600 ரூபாய்க்கு கணேஷ் விற்று வருகிறார்.

நன்றி:

http://www.thebetterindia.com/18252/pump-on-wheels-irrigation-ganesh-kumar-bihar/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here