ஊறுகாய்ப் புல் தயாரிப்பு முறை..!

0
4819

கடுமையான வறட்சிக் காலத்தில் கால்நடைகளுக்குக் கொடுப்பதற்காகப் பதப்படுத்தி வைக்கப்படும் தீவனம்தான் ஊறுகாய்ப் புல், தீவனச்சோளம், கோ-1, கோ-2, கோ-3, கோ-4, கோ-5, கோ-6, கினியா புல், கொழுக்கட்டைப் புல், தீவனத்தட்டை, குதிரை மசால், வேலிமசால், முயல்மசால் ஆகியவற்றில் கிடைப்பவற்றை ஊறுகாய்ப் புல்லாகப் பதப்படுத்தி வைக்கலாம்.

6X6 அடி தூரம், 3 அடி ஆழம் என்ற அளவில் குழி எடுத்துக்கொள்ள வேண்டும். குழி மேடான இடத்தில் இருக்க வேண்டும். குழிக்குள் கால் அடி உயரத்துக்கு மணலைப் பரப்பி, அதன் மீது கொஞ்சம் சுண்ணாம்பு பொடியைத் தூவ வேண்டும். அதில் ஓர் அடி உயரத்துக்குப் புல் வகைத் தீவனத்தைப் பரப்ப வேண்டும். அதன் மேல் பயறு வகைத் தீவனத்தைப் பரப்ப வேண்டும். அதுக்கும் மேல் உலர் வகைத் தீவனத்தைப் பரப்ப வேண்டும்.

பிறகு, 4 லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ கல் உப்பைக் கரைத்துத் தீவனப்பயிர்கள் மீது கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிக்க வேண்டும். அது அடி வரை இஞ்சியவுடன், 4 லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ நாட்டுச் சர்க்கரையைக் கரைத்துத் தெளிக்க வேண்டும். பிறகு, ஒரு பாலித்தீன் ஷீட் கொண்டு குழியை மூடி, ஷீட் நகராத அளவுக்கு மண், சாணம் கொண்டு மெழுகிவிட வேண்டும். இப்படி வைத்தால் 60 நாட்களில் ஊறுகாய்ப் புல் தயாராகிவிடும்.

பசுந்தீவனம் கிடைக்கும் காலங்களில் இப்படி பல குழிகள் எடுத்து பதப்படுத்தி வைத்துவிட்டால், அவற்றை வறட்சிக் காலங்களில் பயன்படுத்திச் சமாளிக்கலாம். ஊறுகாய்ப் புல்லை வெளியே எடுத்துவிட்டால் அதிக நாட்கள் வைக்க முடியாது. அதனால், விரைவாகப் பயன்படுத்தி விட வேண்டும். முற்றிய, தடிமனான தீவனச்சோளத் தண்டுகளைக்கூட இம்முறையில் பதப்படுத்தலாம்.

நன்றி

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here