Skip to content

சொட்டு நீர் மானியம் பெறுவது எப்படி ?

நான்காம் உலகப்போரே இனி தண்ணீரால்தான் என்று உலகநாடுகள் எல்லாம் கணித்துக்கொண்டிருக்கும் இச்சூழ்நிலையில் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் குறைந்துகொண்டே வருகிறது. இந்நிலையைப்போக்கத்தான் சொட்டு நீ்ர் மேலாண்மை ஒரு வரப்பிரசதமாக அமைந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் சமீபத்திய ஆய்வு அறிக்கையில் சொட்டுநீர் பாசனத்திற்கு அதிக செலவு பிடிக்கும் என்பதும், அதற்காகத்தான் அரசாங்கம் விவசாயி்களுக்கு உதவிட பல்வேறு மானியங்களை அளித்து வருகிறது.

சொட்டு நீருக்கும் அரசாங்கம் மேலாண்மை மானியங்களை தெரிந்துகொள்ளலாம்.

முகவர்கள் கேட்கும் பட்டா, சிட்டா உள்ளிட்ட ஆவணங்களைக் கொடுத்துவிட்டு, அவர்கள் கேட்கும் பணத்தையும் கொடுத்துவிட்டால்.. சொட்டுநீர்ப் பாசனம் அமைத்துக் கொடுத்து விடுவார்கள். மானியம், சொட்டுநீர் அமைக்கும் நிறுவனங்களின் வங்கிக்கணக்குக்கே சென்றுவிடும். இந்த முறையில் தனக்கு வழங்கப்பட்ட மானியம் எவ்வளவு என்பது விவசாயிகளுக்கே தெரியாமல் இருந்தது. முகவர்கள் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டிய நிலைதான் இருந்தது. இந்தப் பிரச்னைகளுக்காக, விவசாயிகள் பயனடையும் வகையில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் மென்பொருளில் சில புதிய மாற்றங்களைச் செய்துள்ளது, தோட்டக்கலைத்துறை.

தற்போது ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும்போது.. ஒவ்வொரு நிறுவனத்தின் விலைப்பட்டியலையும் விவசாயிகள் பார்வையிட முடியும். அவற்றிலிருந்து தனது நிதிநிலைமைக்கு ஏற்ற நிறுவனங்களை விவசாயிகளே தேர்வு செய்ய முடியும். அத்துடன், சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கவிருக்கும் பரப்பளவைப் பதிவு செய்தால்.. அதற்கான மானியத்தொகை எவ்வளவு என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். இதன் மூலமாக மானியத்தின் முழுப் பலனையும் விவசாயிகள் அனுபவிக்க முடியும்.

விண்ணப்பிக்கும் முறை

https://tnhorticulture.tn.gov.in/horti/mimis/ என்ற இணையதள முகவரிக்குச் சென்றால்.. நுண்ணுயிர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பு எனும் பக்கம் திறக்கும். இந்தப் பக்கத்தைத் திறந்து இடதுபுறம் உள்ள மெனுவில் விவசாயி என்ற தலைப்பை கிளிக் செய்து விவசாயியே விண்ணப்பிக்க முடியும். புதிய விண்ணப்பம் செய்ய, ஏற்கனவே செய்த விண்ணப்பத்தின் தற்போதைய நிலை, நிறுவனங்களின் விலைப்பட்டியல் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளும் வகையில் தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளில் தனித்தனி தலைப்புகள் இருக்கும். அவற்றில் தேவையான தலைப்பை கிளிக் செய்து விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

விவசாயி, தோட்டக்கலை அலுவலர், நிறுவனங்கள் என இந்த மூன்று நபர்களில் யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். ஆனால், எந்த விவசாயி பெயரில் விண்ணப்பம் செய்யப்படுகிறதோ, அந்த விவசாயியின் குடும்ப அட்டை எண் மற்றும் செல்போன் எண்ணைப் பதிவு செய்தால்தான் விண்ணப்பிக்கவே முடியும். செல்போன் எண் பதிவு செய்யப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட விவசாயியின் செல்போனுக்கு ‘ஒன் டைம் பாஸ்வேர்டு’ (OTP) குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். அந்தப் பாஸ்வேர்டை பதிவு செய்தால்தான் விண்ணபிப்பதைச் சமர்ப்பிக்க முடியும். இதனால், சம்பந்தப்பட்ட விவசாயிக்குத் தெரியாமல் யாரும் விண்ணப்பிக்க முடியாது.

சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க உள்ள நிலத்தின் சர்வே எண், பரப்பு, பயிர்களின் விவரம் ஆகியவற்றைப் பதிவு செய்தவுடன், அதற்கான மானியத்தொகை விவரங்களும் செல்போன் எண்ணுக்குக் குறுஞ்செய்தியாக வந்துவிடும். நில உரிமையாளர்கள் மட்டும் அல்லாமல் குத்தகை விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்யும் முறை எளிமையாக அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழிலேயே இருக்கிறது. இந்த முறையில் விண்ணப்பிப்பதற்கு முன்பாக.. நிலம் தொடர்பான பட்டா, சிட்டா, வரைபடம், விவசாயியின் புகைப்படம், சிறு குறு விவசாயி என்பதற்கான சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அவற்றைத் தேவைப்படும் இடங்களில் அப்லோட் செய்யவேண்டும். நாம் விண்ணப்பித்த பிறகு, அதில் மாற்றம் செய்ய வேண்டியிருந்தால், அந்த மாற்றத்தையும் நாமே செய்துகொள்ளும் வகையில் ‘எடிட்’ வசதியும் உள்ளது.

தற்போது மானியத்துக்காக விண்ணப்பித்து விட்டு ஒவ்வொரு மேசையாகச் சென்று அலுவலர்களிடம் கெஞ்ச வேண்டிய நிலை மாறிவிட்டது. ஆன்லைன் விண்ணப்ப முறையில்.. நமது விண்ணப்பம் எந்த நிலையில் இருக்கிறது.. ஒன்றிய அளவில் நிலுவையில் இருக்கிறதா.. மாவட்ட அளவில் நிலுவையில் இருக்கிறதா.. என்ன காரணத்தால் நிலுவையில் இருக்கிறது? போன்ற விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும்.

ஆன்லைன் விண்ணப்ப முறை குறித்து நம்மிடம் பேசிய தோட்டக்கலை அதிகாரி ஒருவர், “இது அருமையான முறை. இதன் மூலமாக விண்ணப்பம் செய்வதற்காக விவசாயி அலையத் தேவையில்லை. அனைத்து நிறுவனங்களின் விலைப்பட்டியலையும் தெரிந்துகொண்டு, தனக்கேற்ற நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க முடியும். சுருக்கமாகச் சொன்னால், சம்பந்தப்பட்ட விவசாயிக்குத் தெரியாமல் அவரது நிலத்துக்கு இனி யாரும் மானியம் கோர முடியாது.

தற்போது இந்த முறை செயல்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனாலும், இதில் இன்னும் சின்னச் சின்னத் தொழில்நுட்ப பிரச்னைகள் இருக்கின்றன. அவற்றைச் சரி செய்யும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. விரைவில் சரி செய்யப்பட்டுவிடும். இந்த முறையில் விண்ணப்பம் செய்ய நினைப்பவர்கள், தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு அருகிலுள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால் உரிய விளக்கம் பெறலாம்.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

1 thought on “சொட்டு நீர் மானியம் பெறுவது எப்படி ?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj