Skip to content

கம்பு செடியின் பண்புகள் மற்றும் பயன்கள்..

வளரியல்பு

ஆண்டுதோறும் வளரக்கூடியவை.

கழைகள்

கழைகள் திடமானது, 3 மீட்டர் உயரமானது, நெருக்கமானது.
கணுக்கள் மொசுமொசுப்பானது, மஞ்சரி கீழ்ப்புறத்தில் இருக்கும்.

இலைகள்

இலை உறைகள் தளர்வானது, வழவழப்பானது; ஏறத்தாழ 20-100X2-5 செ.மீ நீளமானது, இரு மேற்பரப்புகள் மற்றும் விளிம்புகள் சுணையுடையது; அடிப்பகுதி இதய வடிவமானது; இலை உறைச்செதில் சுமார் 2-3 மி.மீ நீளமுடையது.

மஞ்சரி

நேரானது முதல் அகலமானது, நீள்வட்ட வடிவமானது, நெருக்கமானது, ஏறக்குறைய 40-50X1.5-2.5 செ.மீ நீளமுடையது; அச்சு நெருக்கமானது. மொசுமொசுப்பானது, பூவடிச் செதிலின் மேலுறை உதிர்ந்து (விழுந்து) விடாமல் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கும், 1-9 பூங்கிளைகள் சூழ்ந்திருக்கும், கூடை வடிவுடைய காம்பு சுணையானது, சுமார் 1-25 மி.மீ நீளமுடையது; பூங்கிளைகளில் ஊசி, போன்ற உரோமங்கள் வழக்கமாகக் குறுகியவை, வழுவழுப்பானது, நெருக்கமானது. இறகு போன்றது.

மலர்கள் : சிறு காம்பிலிகள் தலைகீழ் முட்டை வடிவமானது, சுமார் 3.5-4.5 மி.மீ நீளமானது; கீழ்ப்பகுதி உமிச்செதில் நுண்ணியவை, சுமார் 1 மி.மீ. நீளமானது; மேல்மட்ட உமிச்செதில் சுமார் 1.5-2 மி.மீ நீளமுடையது, 3-நரம்புகள்; ஆண் மலர் கீழ் உமி சுமார் 2.5 மி.மீ நீளமுடையது. 5-நரம்புகள், விளிம்புகள் சவ்வு போன்றவை மற்றும் விளிம்பில் முடிகளைக் கொண்டது, மேல் உமி நுண் தளிர் சுணை மற்றும் மெல்லிய தாள் போன்றது; மேல்மட்ட கீழ் உமி 5-7 நரம்புகள், மெல்லிய தாள் போன்றது, நுண் தளிர் சுணை, விளிம்பில் முடிகளைக் கொண்டது, முனை நுனி மழுங்கியது; மகரந்தப்பைகளுடன் ஒரு குறுகிய முடிகள் முனையில் கொண்டது.

பூக்கும் பருவம் : மலர்கள் செப்டம்பர் முதல் அக்டோபர் வரை பூக்கும்.

காய்க்கும் பருவம் : கனிகள் அக்டோபர் முதல் நவம்பர் வரை காய்க்கும்.

பரவியிருக்குமிடம் : பயிரிடக்கூடியவை. வட மற்றும் கிழக்கு சீனா போன்ற நாடுகளில் காணப்படும்.

பிராந்திய மொழிப் பெயர் : தமிழ் – (Vernacular Names)

கம்பு – சாம்பசிவம் பிள்ளையின் தமிழ் – ஆங்கில அகராதிப் பதிப்பு
பச்சிலை மூலிகை அகராதி
வின்ஸ்லோ
கழக அகராதி

கதம்பம் – பச்சிலை மூலிகை அகராதி

கம்பின் – பச்சிலை மூலிகை அகராதி

கவலை – பச்சிலை மூலிகை அகராதி

குள்ளன் கம்பு

சியாமாகம் – சாம்பசிவம் பிள்ளையின் தமிழ் – ஆங்கில அகராதி

செந்தளை – பச்சிலை மூலிகை அகராதி

செந்தழை – சாம்பசிவம் பிள்ளையின் தமிழ் – ஆங்கில அகராதி

சென்னால் – பச்சிலை மூலிகை அகராதி

நீலாரம் – பச்சிலை மூலிகை அகராதி

பிற மாநில மொழிப் பெயர்கள் – ஆங்கிலத்தில்

ஹிந்திப் பெயர் (Hindi Name)

Baajera
Baajra
Baajri
Kasajonar
Lahra
Bandra

சமஸ்கிருதம் (Sanskrit)
Agradhanya
Baarjaree
Nali
Nalika
Nilakana
Nilasasya
Sajaka
Vajraanna
Varjari
Varjarika

தெலுங்குப் பெயர் (Telugu Name)
Gantelu
Peddaganti
Nakka korra

கன்னடப் பெயர் (Kannadam)
Sajjae
Sajjae hullu
Bilikorla hullu

மராத்தி (Marati)
Baajaree

மலையாளப் பெயர் (Malayalam)
Kampam
Mattari

நிகண்டுகள்

ஆசிரிய நிகண்டு – வளர்கவலை, செந்தினை, புல்-உடன் மூன்றுமே மாசு இலா கம்பின் பெயர்.

சூடாமணி நிகண்டு – செந்தினை, கவலை கம்பு

இதர இரகங்கள் (Other Variety/Species)

உள்ளுறைக் கம்பு – Pennisetum clandestinum
கீழ்த்திசைக் கம்பு – Pennisetum orientale
சிறுமலர்காம்பு கம்பு – Pennisetum pedicellatum
சுருள்முடிக் கம்பு – Pennisetum lanatum
நரம்புக் கம்பு – Pennisetum nervosum
நரிவால் கம்பு – Pennisetum alopecuroides
நாட்டுக் கம்பு – Pennisetum glaucum
பலவீனக் கம்பு – Pennisetum flaccidum
பிரிந்த கம்பு – Pennisetum divisum
முன்ஜா கம்பு – Pennisetum hohenackeri

மருத்துவப் பயன்பாடு

பால்சுருக்கி

உபயோகப்படுத்தும் மருத்துவ முறைகள் (System of Medicine Used)
நாட்டு வைத்தியம் – Folk Medicine
தாய்ப்பால் சுரப்பினை நிறுத்த
ஆரைக்கீரையைச் சமைத்து உண்டாலோ, மல்லிகைப் பூ, வதக்கிய தேங்காய்ப்பூ, கம்பு அரைத்த விழுது இவற்றில் ஏதேனும் ஒன்றை வைத்துக் கட்டுவதாலோ பால் சுரப்பை நிறுத்தலாம்.

உணவே மருந்து (Food Medicine)

கம்புக் கஞ்சி திராவகம்

கம்பஞ்சோறு காடி 4 படியில் சீனக்காரம் 2 பலம் ஊற வைத்து, சட்டியால் மூடிப் புகைநீர் எடுக்கவும். 1 கரண்டி நீர் அருந்த, நீர்ச்சுருக்கு – Oliguria, செரியமாந்தம் – Indigestion, மலக்கட்டு – Constipation தீரும்.

பயன்

கம்பு அரிசி சொறிசிரங்கு – Scabies with pustules இவற்றை உண்டாக்கும்; உடற் கொதிப்பையகற்றி – Body temperature குளிர்ச்சியைத் தரும் – Coolant உடலுக்குப் பலத்தை – Strengthens body உண்டாக்கும்.

“கம்பினது சாதத்தாற் காசசுவா சஞ்சிரங்கும்
பம்பும் உடல்மிகப் பாரிக்குஞ்-செம்பாலோ
வற்றுவது மன்றிநிற மாறுமென்பார் வாமமெலா
முற்றுமுலை மாதே! மொழி” – அகத்தியர் குணபாடம்.

ஏற்படுத்தும் பாதிப்பு

கம்பு சாதம்:

காசம் – Asthma
இருமல் – Cough
இளைப்பு – Fatigue
சிரங்கு – Scabies

முதலிய நோய்கள் பெருகும். உடல் பாதிக்கும். உடலிலுள்ள இரத்தம் வற்றி நிறம் மாறும் எனக் கம்பு உணவின் பாதிப்பைக் கூறுகின்றது அகத்தியர் குணபாடம்.

செய்முறை மற்றும் உபயோகிக்கும் முறை

கம்பரிசிக்கூழில் சிறிது ஆவின் தயிராவது, மோராவது கூட்டிக் காலைதோறும் பருகிவரின் வயிற்று எரிவு – Stomach irritation சாந்தமாகும். கம்பைச் சமைத்து எருமைத்தயிர் விட்டுப் பிசைந்து முளை மூலத்துக்குக் – Haemorrhoids கட்டி வரக் குணமுண்டாகும்.
கம்பு மாவின் கூழ் உடம்பினைத் தூய்மையாக்கும்.

நன்றி

இரா.பஞ்சவர்ணம்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj