வறட்சியை தாங்கும் நுண்ணுயிரி..!

0
5277

மிகுந்த மனவேதனையுடன் இந்த பதிவு, இனி ஒரு விவசாயியும் சாகக்கூடாது என உணவுண்ணும் அனைவரும் உறுதி ஏற்க்கவேண்டும். இதை படிக்கும் ஒவ்வொரு நண்பர்களும் தயவுசெய்து பத்து இணையதள வசதியில்லாத நபரிடம் வாய்வழியாக இதை கூறினால் மட்டுமே சாவின் விளிம்பில் இருக்கும் விவசாயிடம் இந்த செய்தி சென்றுசேரும், உங்கள் பங்களிப்பு மிகவும் தேவை,

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தயாரிக்கும் ஒரு நுண்ணுயிர் கலவை பயிர்கள் தற்காலிகமாக வறட்சியை தாங்கி 7 முதல் 10 நாட்கள் தாக்குப்பிடிக்க உதவும் , இதை தெளிக்கும்போது சிறிதளவேணும் பயிர் உயிருடன் இருக்கவேண்டும், வாடும் பயிர்களை மீண்டும் பச்சை நிறமாக மாற்ற நமது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் PPFM என்ற ஒரு திரவத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் மருந்தை 200லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும், பயிர் மீண்டும் பச்சை கொடுக்கும், இது எல்லா பயிருக்கும் தெளிக்கலாம், ஒரு லிட்டர் ரூ300/- உங்கள் ஊருக்கு அருகிலுள்ள விவசாய அலுவலகத்தில், கிசான் விகாஸ் கேந்திரா, வேளாண் விரிவாக்க மையம் இவற்றில் கேட்டுவாங்குங்கள், மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழக தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்
(தொலைபேசி எண் 0422-6611294)

PPFM – TNAU Agritech Portal : PINK PIGMENTED FACULTATIVE METHYLOTROPS (PPFM) (http://bit.ly/StopFarmerDeathsEN)

தமிழ் பதிவு : http://bit.ly/StopFarmerDeaths
கே.வி.கே முகவரிகள் :- http://agritech.tnau.ac.in/kvk/kvk_tn.html

பெருமளவில் தமிழக மற்றும் கேரள விவசாயிகள் இங்கே ஊருக்கு ஒரு நாலு பேர் நேரில் வாகனங்களில் வந்து வாங்கிச்சென்று ஊருக்கே கொடுக்கிறார்கள், உடனே இத்தகவலை வாய்வழியாக ஏழை விவசாயிகளிடம் கொண்டு சேருங்கள், இதை படிக்கும் ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த தெரியாத கிராமத்து நண்பர்கள், பல்வேறு பேஸ்புக் பக்கங்களில், வாட்ஸ்சப் குழுக்களில் பதிவிட்டு விவசாயிகளை காப்பாற்றுங்கள், இல்லாவிட்டால் நாட்டுமாடுகளுக்கு முன்னால் நமது விவசாயிகளை நாம் இழந்துவிடுவோம், உணவிடும் விவசாயி இறந்தபின்னர் நாம் அனாதைகள் தாம், உடனே செயல்படுங்கள், குழுக்கள் அமையுங்கள், காப்பாற்றுங்கள்,

பயன்படுத்தும் முறை பற்றிய விடியோ :- http://bit.ly/StopFarmerDeathsVideo1
பயன்படுத்தி பலன்கண்ட வெற்றிக்கதை :- http://bit.ly/StopFarmerDeathsVideo2

முகவரி
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
நுண்ணுயிரியல் ஆய்வகம்
மருதமலை சாலை
கோயம்புத்தூர்
தொலைபேசி எண் : 0422-6611294

ஆசிரியர்

என். மதுபாலன், B.sc (Agri),

 இயற்கை வேளாண்மை ஆலோசகர்,

தர்மபுரி.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here