உண்மையாகவே இயற்கை உணவுகள் ஆரோக்கியமானவையா?

0
3154

சமீபத்தில் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, பாதிக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் இயற்கை உணவை உட்கொள்வதால் அதிக அளவிலான ஊட்டச்சத்துகள் கிடைப்பதாக நம்புகின்றனர் என தெரியவந்துள்ளது.

55 சதவீத அமெரிக்கர்கள், மற்ற உணவு வகைகளை காட்டிலும், இயற்கை உணவுகள் அதிக சத்தானவை என நம்புகின்றனர். 40 சதவீத அமெரிக்கர்கள் தாங்கள் வாங்கும் உணவு வகைகளில் சிலவற்றை இயற்கை உணவாக தேர்ந்தெடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த 2015-ஆம் ஆண்டு சராசரி விற்பனையைக் காட்டிலும் இயற்கை உணவுகளின் விற்பனை 11 சதவீதம் அதிகரித்துள்ளது. பாரம்பரிய விவசாயத்தை காட்டிலும், இயற்கை உணவுகளை விளைவிப்பது லாபகரமான தொழிலாக அமெரிக்காவில் மாறியுள்ளது. ஆனால் தற்போது வரை இயற்கை உணவுகளை உட்கொள்வதால் உடலுக்கு நன்மை விளைகிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2012-ஆம் ஆண்டு ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், 237 நாளிதழ்களில் இயற்கை உணவுகள் குறித்த கட்டுரைகளை ஆராய்ந்தபோது பாரம்பரிய விவசாயம் மூலம் கிடைக்கும் உணவுகளுக்கும், இயற்கை உணவுகளுக்கும் எந்த வித்தியாசம் இருக்கிறது என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

”பெரும்பாலான மக்கள் இயற்கை உணவுகள் நல்லது என நினைக்கின்றனர். ஆனால் அவர்கள் நம்பிக்கைக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. ஆனால் மக்கள் தங்கள் பணத்தில் அதிக அளவு காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொண்டாலே, அவர்களுக்கு அதிகளவு சத்துகள் கிடைக்கும் என்பதே உண்மை.” என உணவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆரோக்கியமான உடல்நிலை மற்றும் ஊட்டச்சத்துகள் குறித்து விழிப்புணர்வு வளர்ந்துள்ளதால், மக்களில் பலர் இயற்கை உணவுகள் பக்கம் தங்கள் கவனத்தை செலுத்தி வருகின்றனர். ஆனாலும் சிலர் இயற்கை விவசாய முறைகளில் சில செயற்கை உரங்கள், பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தப்படுவதாக நம்புகின்றனர். தற்போதும் கூட சில இயற்கை விவசாயிகள் குறைந்த அளவில் விஷத்தன்மை உடையதாக கூறப்படும் செயற்கை உரங்கள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு பூஞ்சை ஒழிப்பிற்காக பயன்படுத்தப்படும் காப்பர் சல்பேட்டை, இயற்கை விவசாயிகளும் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

கடந்த 1985-ஆம் ஆண்டு முதல் விவசாயம் குறித்தும் அது சார்ந்த கண்டுபிடிப்புகள் குறித்தும் ஆராய்ந்து வரும் சயிண்டிபிஃக் அமெரிக்கன் என்ற இதழ், பாரம்பரிய இயற்கை முறைகளை விட இயற்கை விவசாயம் பெரிய அளவில் சுற்றுப்புறச்சூழலுக்கு நன்மை அளிப்பதாக கூற முடியாது என தெரிவித்துள்ளது. ஏற்கனவே பல ஆண்டுகளாக பாரம்பரிய விவசாயம் செய்து வரப்பட்டுள்ள விவசாய நிலங்கள்,இயற்கை விவசாயத்திற்கு உடனடியாக ஒத்துழைப்பு அளிப்பதாக கூற முடியாது. அதிகளவில் இயற்கை உணவுகள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால் அது எந்த அளவிற்கு பாதுகாப்பானது என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

இயற்கை உணவுப் பொருட்கள் இல்லாத உணவுகள் மீது மக்களுக்கு ஏற்பட்டு வரும் சந்தேகம், மக்களை மோசமான உணவுப் பழக்கவழக்கத்திற்கு கொண்டு சென்று விடுமோ என உணவியல் நிபுணர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். சிகாக்கோ மாகாணத்தில் உள்ள நடுத்தர மக்கள், விலை அதிகமாக உள்ளதால் ஆர்கானிக் உணவுப் பொருட்களை வாங்க முடியாமல் தவிப்பது மட்டுமின்றி, மற்ற உணவுப் பொருட்கள் உடலுக்கு கெடுதல் என நம்பி அவற்றையும் வாங்குவதையும் தவிர்த்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆனால் இயற்கை உணவுகள் ஆரோக்கியமானது என நினைக்கும் அனைத்து அமெரிக்கர்களும் இயற்கை உணவுகளை மட்டும் பயன்படுத்துவதில்லை. இயற்கை உணவுகள் மீது மக்களுக்கு திடீரென ஏற்பட்டிருக்கும் இந்த ஆர்வத்திற்கு, மக்கள் தங்கள் உடல்நிலை மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கத் துவங்கியிருப்பதே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதன்காரணமாகத்தான் 81 சதவீத மக்கள் பாரம்பரிய விவசாயம் மூலம் கிடைக்கும் உணவுப் பொருட்களை விட,இயற்கை உணவுகள் ஆரோக்கியமானவை என நம்புவதற்கு காரணமாக அமைந்துள்ளது என கூறலாம்.

நன்றி:http://www.marketwatch.com/story/is-organic-food-really-healthier-2016-12-01

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

விளம்பரம்

“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்
கிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் வழங்குகிறது “இலவச இணையதள இடம்”

ஆம்,
“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”

மேலும் விபரங்களுக்கு
https://cloudsindia.in/
Mobile No : 9943094945

நேரடியாக பதிவு செய்ய
https://goo.gl/w5HlKV

இந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here