Skip to content

கோழிகளின் கழிச்சலை தடுக்கும் பஞ்சகவ்யா..!

சேவல்களுக்குப் பஞ்சகவ்யா கொடுத்து சிறப்பான முறையில் வளர்த்து வருவதாக, ஈரோடு மாவட்டம் சிவகிரி பகுதியைச் சேர்ந்த சீனுவை நமக்குப் பரிந்துரைத்தார், டாக்டர் நடராஜன். சீனுவின் பண்ணையில் அவரைச் சந்தித்தோம்.

”டாக்டரோட சிஷ்யர் புரவிமுத்து என்னோட நண்பர். அவர் மூலமாகத்தான் சேவல்களுக்கும் பஞ்சகவ்யா கொடுக்கலாம்னு தெரிஞ்சிகிட்டேன். டாக்டர்தான் பஞ்சகவ்யாவை தயாரிக்கும் முறை, மற்றும் பயன்படுத்தும் முறைகளை சொல்லிக் கொடுத்தார். எங்கிட்ட கீரி, மயில், காகம், வல்லூறு, ஆந்தை, பொன்னிறம்னு பல ரகங்களில் 150 சண்டைச் சேவல்கள் இருக்கு. வெள்ளைக்கழிச்சல் நோய்தான் கோழி இனங்களுக்கு எமன். கோடைகாலத்துல இந்த நோய் தாக்கும். ஒரு கோழிக்கு கழிச்சல் வந்திட்டா, எல்லா கோழிகளுக்கும் வேகமாகப் பரவ ஆரம்பித்து விடும். இதை சரியாக கவனிக்காவிட்டால் கோழிகளை காப்பாற்ற முடியாது. முறையாக பஞ்சகவ்யா கொடுக்கிற கோழிகளுக்கு, இந்த நோய் தாக்குவதில்லை. வெயில் காலங்களில் கோழிகள் தண்ணீர் அதிகமாக குடிக்கும். அதனால் குடிநீரிலே பஞ்சகவ்யாவைக் கலந்து வைத்து விட வேண்டும். 100 மில்லி தண்ணீருக்கு 3 மில்லி பஞ்சகவ்யானு கலந்து வைத்துவிட வேண்டும். குறிப்பாக. பருவம் மாறும் காலங்களில் இதை தொடர்ந்து கொடுக்க ஆரம்பித்தால், கழிச்சல் நோய் தாக்காது. கம்பு, சோளம், மக்காச்சோளம், கேழ்வரகு மாதிரியான சிறுதானியங்கலை, வடிகட்டிய 3 சதவிகித பஞ்சகவ்யா கரைசலில் நனைத்து, நிழலில் உலர்த்தி வாரம் ஒரு நாள் கொடுப்போம். அதனால் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து எந்த நோயும் வருவதில்லை” என்றார்.

தொடர்புக்கு : சீனு

செல்போன் : 85268 54774

நன்றி

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

விளம்பரம்

“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்
கிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் வழங்குகிறது “இலவச இணையதள இடம்”

ஆம்,
“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”

மேலும் விபரங்களுக்கு
https://cloudsindia.in/
Mobile No : 9943094945

நேரடியாக பதிவு செய்ய
https://goo.gl/w5HlKV

இந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj