Skip to content

வான்மழை சேகரிக்கும் வான்கோழிகள் : பகுதி : 6

இந்த வருமானத்தைவிட, தோட்டங்களில் வான்கோழி வளர்க்கும்போது  மண்ணும் வளமாகிறது. அரசாங்கம் சட்டம் போட்ட பின்பும் மழைநீர் சேகரிப்பை நாம் ஒழுங்காக செய்யவில்லை. ஆனால், வான்கோழிகள் அருமையான மழைநீர் கலன்கள் ஒரு வான்கோழி மண்குளியலுக்காக தோண்டும் குழியின் அளவு ஒரு அடி அகலம், அரையடி ஆழம்.. அதே மாதிரி நான்கு ஐந்து இடத்தில் குழிகளைத் தோண்டி விளையாடும். இந்த குழியில் மழை பொழியும் போது இரண்டு லிட்டர் தண்ணீர் நிற்கும். ஐந்து குழியிலும் பத்து லிட்டர் தண்ணீர் தேங்கும். வருடத்திற்கு பத்து தடவை மழை பெய்தாலும் நூறு லிட்டர் தண்ணீர் தண்ணீர் நிற்கும். நூறு வான்கோழிகள் இருந்தால் பத்தாயிரம் லிட்டர் மழைத் தண்ணீர் உங்கள் நிலத்துக்குள் சேகாரமாகும். அதே போல் 20 வான்கோழிகள் ஒரு வருடத்தில் ஒரு டன் எருவை உற்பத்தி செய்யும். இந்த எருவில் 5.9 சதவிகித நைட்ரஜன் சத்தும், 2.7 சதவிகித பொட்டாஷ் சத்தும் இருக்கு.

கொட்டகை முறையில் வான்கோழிகளை வளர்ப்பது பற்றி பாலு சொன்னதைக் கேட்டீர்கள். இனி மேய்ச்சல் முறையில் வளர்க்கும் முறைகளைப் பற்றி பார்ப்போம்.

மேய்ச்சல் முறை

வான்கோழி வளர்க்க நினைப்பவர்கள், குஞ்சுகளை உற்பத்தி செய்யப் போகிறோமா..? கறிக்கோழிகளை உற்பத்தி செய்ய போகிறோமா என்பதை முடிவு செய்துக்கொண்டு, அதற்கேற்ப இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும். பெரிய தென்னந்தோப்பு, பழத்தோட்டங்கள், பூத்தோட்டங்கள் இருப்பவர்கள் வான்கோழியைத் தோட்டங்களில் மேயவிட்டு வளர்க்கலாம். இதற்கு பெரிய கொட்டகை தேவையில்லை. இரவு நேரங்களில் தங்குவதற்கும், மழை, வெயில் நேரங்களில் ஒதுங்குவதற்கும் சின்னதாக ஒரு கொட்டகை அமைத்தால் போதும். இப்படி மேயவிடுவதால் தனியாக தீவனம் கொடுக்கத் தேவையில்லை.

நன்றி

பணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj