பசுமைக்குடில் தொழில்நுட்பம்

0
2766

இன்று எங்கு பார்த்தாலும் பசுமைக்குடில் மூலம் விவசாயம் நடக்கிறது. வருடம் முழுவதும் காய்கறிகள், காளான் வளர்ப்பு, நாற்று உற்பத்தி செய்து சம்பாதிக்கின்றனர். அது பற்றி அறிவோம்.

எதையும் உயர்த்திட, தரமான தொழில்நுட்பம் தேவை. கிணற்றில் நீர் இறைக்க மாட்டை பயன்படுத்தினர். மோட்டார் தொழில்நுட்பம் வந்து 300 அடிகளில் இருந்து கூட நீரை இறைத்து விவசாயம் செய்கின்றனர். அப்படிப்பட்ட தொழில்நுட்பம் தான் பசுமை கூடாச விவசாயம் ஆகும்.

90 முதல் 95% பயிர்கள் வயல்வெளிகளில் வளர்க்கப்படுகின்றன. ஆனால் வருடம் முழுவதும் வளர்க்க முடியாது. ஆனால் பசுமைக் கூடாரம் அமைத்தால் வருடம் முழுவதும் விவசாயம் செய்ய இயலும். குளிர்பிரதேசங்களில் அதிகப்படியான குளிரில் இருந்து பயிர் களை தொடர்ந்து காப்பாற்றி, உயர் மதிப்புள்ள பயிர்களை வளர்க்க “”பசுமைக் கூடார தொழில்நுட்ப முறைகள்” உருவாக்கப்பட்டன. காற்று, குளிர், மழை, அதிக சூரிய ஒளி, அதிக வெப்பம், பூச்சி மற்றும் நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. பசுமைக் கூடாரம் என்பது ஒளி ஊடுருவக் கூடிய கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் போர்த்தப்பட்ட அமைப்பாகும்.

இதனுள் தேவையான தட்பவெப்ப நிலை உருவாவதுடன், இரவில் வெளியிடும் கரியமில வாயு உள்ளேயே தங்கி, ஒளிச்சேர்க்கைக்கு உதவுகிறது. விளைச்சல் அதிகமாகிறது. ஈரப்பதம் குறையாது. அதிகநீர் தேவைப்படுவதில்லை.

பசுமைக் கூடாக பயன்கள்: பூச்சி, எலி, பறவைகளின் தாக்குதல் இல்லை. வெப்பம், பெரும் மழை, காற்று தடுக்கப்படும். பூச்சி மருந்து / உரங்களின் சரியான பயன்பாடு சாத்தியமாகும். தட்பவெப்பம் கட்டுப்படுவதால் வருடம் முழுவதும் எந்த பயிரையும் பயிர் செய்யலாம். ஆண்டு முழுவதும் காய்கறிகள், கொய்மலர்கள் கிடைப்பதால் லாபம் அதிகமாகிறது.

இதனை அமைக்க சிறிது மேடான இடமாக இருக்க வேண் டும். தேவையான மின்சாரம் கிடைக்க வேண்டும். அருகில் மரம்/ கட்டிடம் இருக்க கூடாது. கிழக்கு – மேற்காக அமைக்க வேண்டும். வாய்க்கால் வடக்கு – தெற்காக அமைய வேண்டும்.

அமைக்கும் முறை : 4X2 மீ அளவில் செவ்வகமாக உருவாக்கலாம். 4 மூளைகளிலும் இரும்புக் குழாய்களை கான்கிரீட் மூலம் நிறுவ வேண்டும். பின் முடிவுச் சட்டத்தைப் பொருத்த வேண்டும்.

பக்கவாட்டு தாங்கிகளை பொருத்த வேண்டும். பின் தேவைப்படும் குழாய்களை நிறுவ வேண்டும். பின் கூடாரத்தின் மேல் பாலிதீன் தாள் கொண்டு மூட வேண்டும். காற்றோட்ட வசதி, சூடேற்றும் வசதி செய்ய வேண்டும். இதன் மூலம் கொய்மலர்கள், காளான், தரமான நல்ல விளைச்சல்களைப் பயிரிடலாம்.

நன்றி

எம்.ஞானசேகர்,
93807 55629.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here