கோதுமை உற்பத்தியில் பாதிப்பு

0
2957

இங்கிலாந்து மற்றும் வங்காளத்தில் உள்ள விஞ்ஞானிகள் குழு ஆசிய விவசாயம் பற்றி ஆய்வு செய்ததில் அதிர்ச்சியூட்டும் தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் ஆசியாவில் கோதுமை உற்பத்தி பெருமளவு சரிவு ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் என்ன என்பது பற்றி ஆய்வு செய்ததில் பூஞ்சைகள் தாக்குதல் பயிரில் இருந்ததே இதற்கு காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதக் கணக்கெடுப்பின்படி 90% மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது 15,000-க்கும் மேற்பட்ட ஹெக்டேர் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு மேலும் தெற்கு ஆசியாவிலும் பரவும் என்று விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர். தற்போது இங்கிலாந்து மற்றும் வங்காளதேச விஞ்ஞானிகள் குழு இணைந்து புதிய வலைதளத்தை (www.wheatblast.net) உருவாக்கியுள்ளனர். அதில் கோதுமை பயிருக்கு ஏற்படும் நோய் பாதிப்பு பற்றி விரிவாக கூறியுள்ளனர். இந்த நோய் பாதிப்பை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள அவர்கள் மரபியல் கிருமிகளை பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

பெரும்பாலும் இந்த வகை பூஞ்சைகள் பாதிப்பு அரிசியில் மட்டுமே ஏற்படும். கடந்த 1980-ல் பிரேசில் நாட்டில் புரவலன் ஜம்ப் என்ற பூஞ்சை நோய் கோதுமையினை அதிக அளவு பாதித்தது. இதனால் சுமார் 3 மில்லியன் ஹெக்டர் கோதுமை பாதிப்பிற்கு உள்ளாகியது. மேலும் இதனை பற்றி ஆய்வு செய்த விஞ்ஞானிகள் குழு ஜீனோம் பகுப்பாய்வு பற்றிய சோதனை செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

https://www.sciencedaily.com/releases/2016/04/160419084509.htm

விளம்பரம்

உங்களுக்கான இணையதளம் தொடங்க வேண்டுமா?

உடனே தொடர்பு கொள்ளுங்கள்..

 hello@cloudsindia.in

சிறப்பான இணையதள சேவைக்கு

http://cloudsindia.in/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here