உலக வெப்பமயமாதலால் தாவரங்களுக்கு நன்மையா? தீமையா?

0
2329

உலக வெப்பமயமாதலால் தீவிர வானிலை மாற்ற நிகழ்வுகள் ஏற்பட்டு வருகிறது. இந்த மாற்றத்தால் co2  அளவு அதிகரித்து பயிர் விளைச்சலை பாதிக்குமா? அல்லது நன்மை பயக்குமா? என்ற கேள்வி விஞ்ஞானிகளிடையே எழுந்துள்ளது. இதனை பற்றிய ஆய்வினை உலகில் உள்ள சிறந்த 16 விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். அவர்களுடைய ஆய்வுப் படி வெப்பமயமாதலால் co2 அளவு அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இந்த அதிகரிப்பால் தாவரங்களுக்கு நன்மையும் ஏற்படுகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள நாசாவின் கோடார்ட் நிறுவனம் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் குழு ஆய்வினை மேற்கொண்டது. அவர்களுடைய ஆய்வுப்படி உலக வெப்பமயமாதலால் பயிர்களுக்கு பல்வேறு பாதுகாப்புகள் ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெப்பமயமாதலால் தாவரத்தின் இலைகளில் அதிக துவாரங்கள் ஏற்படுகிறது. இதனால் தாவரம் அதிக சுவாச பணியினை  மேற்கொள்வதால் தாவரம் நன்கு வளருகிறது. மனிதனின் நடவடிக்கையால் வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் சராசரி அளவு அதிகரித்துள்ளது.

இதனால் காற்றில் சில நன்மை பயக்கும் உயிரி உருவாக ஏதுவாக உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கார்பன் தாவரங்களின் திசுக்களுக்கு அதிக ஆற்றலை கொடுக்கிறது. கடந்த 2014-ம் ஆண்டில் Derying மற்றும் அவரது சகாக்கள் வெப்ப அலைகள் பயிர்களை பாதிக்குமா? அது எந்த வகை பயிர்கள் என்பது பற்றி ஆராய்ந்தனர். அவர்களுடைய ஆய்வுப்படி மக்காச்சோளம்,  சோயாபீன்ஸ்,  கோதுமை, நெல் பயிர்கள் அதிக அளவு பாதிப்படையும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய ஆய்வுப்படி நீர் பயன்பாட்டு திறன் கோதுமை 27 சதவீத சராசரி உயரும் என்று; சோயாபீன்ஸ் 18 சதவீதம்; மக்காச்சோளம் 13 சதவிகிதம்; அரிசியில் 10 சதவீதம் உயரும் என்றும் கூறப்படுகிறது.

https://www.sciencedaily.com/releases/2016/04/160418120327.htm

வரி விளம்பரம்

சிறப்பான இணையதள  சேவைக்கு

http://cloudsindia.in/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here