விவசாயத்தை  ஊக்குவிக்கும் காட்டு தாவர டி.என்.ஏ

2
3413

ஆராய்ச்சியாளர்கள் விவசாயம் சார்ந்த ஆய்வினை இன்று வரை தொடர்ந்து நடத்தி கொண்டேதான் இருகின்றனர். குறிப்பாக தாவர வளர்ச்சிக்கு உதவும் ஆய்வுகள் தற்போது அதிகமாக நடந்து வருகிறது. அவர்களுடைய ஆய்வுப்படி விவசாய நிலங்களில் காட்டு தாவரத்தின் டி.என்.ஏ-வினை பயன்படுத்துவதால் தாவர வளர்ச்சி அதிகரிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த டி.என்.ஏ தாவரத்தின் பரிணாம வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. குறிப்பாக அரிசி, பருத்தி இனங்களில் இதனை பயன்படுத்தினால் அதிக மகசூல் கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும் நோய் எதிர்ப்பு சத்தும் இத்தாவரங்களுக்கு எளிமையாக கிடைக்கிறது. விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக மரபணு ஓட்டம் பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். அவர்களுடைய ஆய்வுப்படி கலப்பின மரபணுக்கள் தாவரத்தின் வளர்ச்சியினை அதிகரிக்கச் செய்வது கண்டறியப்பட்டுள்ளது.

காட்டுத் தாவரத்தில் 25% வளர்ச்சி ஆற்றல் இருப்பதால் மற்ற தாவரத்தின் வளர்ச்சிக்கும் இது அதிக அளவு உதவுகிறது. பெரும்பாலும் காட்டு தாவரத்தின் ஆற்றல் இயற்கை மூலங்களில் இருந்தே அதிகம் கிடைப்பதால் அதனுடைய ஆற்றல் அதிகமாகிறது மேலும் எதிர்காலத்திற்கு உதவும் வகையிலும் உள்ளது. காட்டு தாவரத்தின் வேர் தொகுதிகளில் தனித்துவமான மருத்துவ சக்தி இருப்பதால் அது மற்ற பயிர்களின் வளர்ச்சிக்கும் கண்டிப்பாக உதவும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

https://www.sciencedaily.com/releases/2016/04/160405182946.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here