Skip to content

உணவு பயிர்களின் விளைச்சலை அதிகரிக்க திட்டம்

‘அரிசோனா, வட டெக்சாஸ் பல்கலைக்கழகம் மற்றும் USDA / ARS குழந்தைகள் ஊட்டச்சத்து ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவ பேய்லர் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் இணைந்து உலகின் பயிர் உற்பத்தியினை அதிகரிக்க ஆய்வுகளை மேற்கொண்டனர். ஏனென்றால் தற்போது உலக மக்கள் தொகை சுமார் 7 மில்லியன் அதிகரித்துள்ளது. மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப அவர்களுக்கு உணவினை அளிக்க வேண்டியது மிக அவசியம்.

இது மிகவும் சவாலான ஒரு செயலாகும். இதனை ஈடுகட்ட ஆய்வாளர்கள் கோதுமை, சோளம், அரிசி மற்றும் பார்லி பயிர்களின் விளைச்சலை அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் அவர்கள் பயிர்கள் வறட்சி, காலநிலை மாற்றம் ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் திட்டமிட்டு வருகின்றனர். அவர்களுடைய ஆய்வுப்படி முதலாவதாக மண்ணின் தரத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இத்திட்டத்தின் மூலம் பயிர் விளைச்சலினை பன்மடங்கு உயர்த்த முடியும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

அவர்கள் மேலும் பயிரின் மரபணுவில் புதிய மரபணு வகையான 1 எனப்படும் H+ –Ppase  ஐ பயன்படுத்த உள்ளனர். இந்த மரபணு ஒளிச்சேர்க்கை மூலம் மூலக்கூறுகளை இலைகள் மற்றும் விதைகளில் பரப்புகிறது. தற்போது விவசாயத்தில் அளவிற்கு அதிகமாக உரம் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பிரச்சனை அதிகம் ஏற்படுகிறது. பொதுவாக இயற்கை முறையில் உரம் பயன்படுத்தி தண்ணீரை சரியாக பயன்படுத்தினாலே உணவு பயிர்களின் விளைச்சல் எதிர்பார்த்ததை விட அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

https://www.sciencedaily.com/releases/2016/03/160324145932.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj