குளிர் பிரதேசங்களிலும் சோளம் பயிரிட திட்டம்

0
2346

பண்டைய தானிய வகைகளில் முதன்மையானதாக திகழ்வது சோளமாகும். முதலில் சோளம் 6000 வருடங்களுக்கு முன்பு வடகிழக்கு ஆப்பிரிக்காவில்தான் பயிரிடப்பட்டது. இது அதிக வறட்சியிலும் நன்கு வளரும் பயிராகும்.

இந்த பயிர் இந்தியா, சீனா, மற்றும் ஆஸ்திரேலியா போன்ற பிற வெப்பமண்டல பகுதிகளில், சாகுபடி செய்யப்படுகின்றன. அமெரிக்காவின் தெற்கு சமவெளி விவசாயிகள் 1800-ம் ஆண்டிலிருந்து பயிரிட்டு வருகின்றனர். வெப்பமண்டல பயிரான இதனை குளிர் பிரதேசங்களிலும் தற்போது வளர்க்க ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர். விஞ்ஞானிகள் இதற்கென 40 வகையான சோள விதைகளை உற்பத்தி செய்துள்ளனர்.

இதற்கென மலர் வகை சோளத்தினை அறிமுகப்படுத்தியுள்ளனர். இது குளிர்ந்த வெப்பநிலையிலும் நன்கு வளரும். மேலும் இதற்கென தனியான மரபணுவினை பயன்படுத்த உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மரபணு வேறுபாட்டால் ஏற்படும் நோய் தாக்குதலை  ஈடு செய்ய இயற்கை எதிர்ப்பு பயிர் வகைகளை அறிமுகப்படுத்த உள்ளனர். பெரும்பாலும் சோளத்தினை கால்நடைகளுக்கு தீவனமாக விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பயிரில் அதிக அளவு புரதம், துத்தநாகம், இரும்பு சத்து, பாஸ்பரஸ் காணப்படுகின்றது. சோளத்தில் பல ஊட்டச்சத்து நன்மைகள் உள்ளன. உடலின் சர்க்கரை அளவை ஒரே சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. இது குறைவான கொழுப்பு மற்றும் அதிக நார்சத்து கொண்டதாக இருப்பதால் நன்றாக செரிமானம் ஆகும். மேலும் இருதயம் அரோக்கியமாகவும் இருக்கும்.

https://www.sciencedaily.com/releases/2016/03/160316194214.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here