Skip to content

காட்டு உருளையில் கால்சியம் அதிகம்

USDA-ARS and University of Wisconsin-Madison ஆராய்ச்சியாளார்களான Shelley Jansky, John Bamberg, and Jiwan Palta இணைந்து உருளைக்கிழங்கினை பற்றி ஆய்வு செய்தனர். அதன்படி தற்போது உள்ள உருளைக்கிழங்கில் கால்சியம் மிகக் குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய அதிக கால்சியம் கொண்ட உருளைக்கிழங்கினை பயிரிட விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். பெரும்பாலும் காட்டு உருளைக்கிழங்கில் அதிக அளவு கால்சியம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த வகை இனங்கள் தென் அமெரிக்காவில் உள்ளன.

இங்கு உள்ள உருளைகளில் மட்டும் எப்படி கால்சியம் அதிகம் இருக்கிறது என்பதை ஆராய்ந்த போது அதன் மரபணு மற்ற தாவரத்தின் ஆற்றலை தன்னகத்தே ஈர்த்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டதாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதிகளில் நிலவும் தட்ப வெப்ப நிலைகளும் இதற்கு முக்கிய காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது விஞ்ஞானிகள் இந்த மரபணுவினை வைத்துக்கொண்டு புதிய ஆற்றல் வாய்ந்த இனத்தினை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். அவர்களுடைய ஆய்வுப்படி கிட்டதட்ட ஏழு மடங்கு கால்சியம் காட்டு உருளையில் உள்ளது. தற்போது விஞ்ஞானிகள் 100000 உருளை நாற்றுகளை அதிக அளவு கால்சியம் கொண்டதாக உருவாக்க உள்ளனர். இதனை வரும் 10-15 ஆண்டுகளுக்கு பயன்படுத்த  திட்டமிட்டுள்ளனர்.

https://www.sciencedaily.com/releases/2016/02/160224133638.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj