தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ளும் சோளம்

0
1502

பாய்ஸ் தாம்சன் நிறுவன (BTI) பேராசிரியர் ஜியார்ஜ் Jander குழுவின்  சமீபத்திய ஆய்வு நம்மை வியக்க வைக்கிறது. ஏனென்றால் தற்போது சோள பயிர்களில் ஏற்படும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த புதிய கலவையினை உருவாக்கியுள்ளனர்.

இந்த கலவைகளை இயற்கையாகவே நிப்பிலிங் புழுக்கள் உருவாக்குகின்றன என்பதினை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மேலும் சில பூச்சிகளும் தாவர வளர்ச்சிக்கு உதவுகின்றன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த வகை பூச்சிகள் தீமை விளைவிக்கும் புழுக்களை சாப்பிடுவதால் அது தாவரத்திற்கு மிகுந்த பாதுகாப்பை அளிக்கும். மேலும் தாவர வளர்ச்சிக்கு தேவையான இரசாயனத்தையும் இது அளிக்கிறது. ஆராய்ச்சியாளர்களின் கணக்கெடுப்பின் படி தாவரங்களில் பூச்சிகளின் பரப்பு வீதம் 6-19 சதவீதமாக உள்ளது.

தாவரங்களில் ஏற்படும் பாதிப்பினை சரிசெய்வதற்கு Callose உருவாக்கம் DIMBOA என்ற ஒரு தற்காப்பு கலவையினை தூண்டுகிறது. இந்த DIMBOA, benzoxazinoid என்ற மூலக்கூறினை உருவாக்கிறது. இது தாவரத்தினை அழிவிலிருந்து பாதுகாக்கிறது. இதனை சோதிக்க ஆராய்ச்சியாளர்கள் B73 சோள விதையினை பயிரிட்டனர். இதனை பயிரிட்ட பிறகு அதனை சோதித்து பார்த்ததில் தாவரத்தில் ஏற்படும் பாதிப்புகள் அதிக அளவு குறைந்தது கண்டறியப்பட்டது.

http://www.sciencedaily.com/releases/2016/02/160209090408.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here