Skip to content

விறகு அடுப்பும், ருசியான சமையலும்!

இன்னிக்கு ‘உலகத்திலேயே நாங்கள் தான் வல்லரசு’ என்று சொல்லுகின்ற நாடுகள் எல்லாம், காட்டுல வேட்டையாடி சாப்டுட்டு இருந்த காலத்தில், ’உணவே மருந்து, மருந்தே உணவு, என்கிற நுட்பத்தைக் கண்டுபிடித்து, அறுசுவையோட ருசிச்சு, ரசிச்சு சந்தோஷமா சாப்பிட்ட மனிதர்கள் வாழ்ந்த மண் இது. சங்க இலக்கியங்களில் கூட ’மடை நூல்; என்று சமையல்கலையைப் பற்றி சொல்லும் புத்தகங்களுக்குப் பெயர் உண்டு. கடுகு இட்டுக் காய்கறிகளைத் தாளிப்பது’, ‘பசு வெண்ணெயில் பொரிப்பது’, ‘முளிதயிர் பிசைந்து தயிர்க் குழம்பை வைப்பது’ என்று சமையல்கலை பற்றிய நுட்பத்தை விளக்கமாக சொல்லி வெச்சிருக்காங்க.

சமையல் என்றால் அது பெண்கள்தான் செய்ய வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. எப்பவாவது அருமையான விருந்து சாப்பிட்டவுடனே யாருப்பாது ’நளபாகம்’ மாதிரி சமைச்சு அசத்திருயிருக்காங்க என்று சொல்வதுண்டு. ஆக, ஆண்கள் கூட சுவையாகவும், மணமாகவும் சமைக்க முடியும். இன்னைக்கும் கூட திருமணம், காதுகுத்து, திருவிழா. . . . போன்ற விசேஷங்களில் நூத்துக்கணக்கான பேருக்கு சமைப்பது என்றால் பெரும்பாலும் ஆண்கள்தான் சமையல் வேலையைச் செய்கிறார்கள். ஆனால் இந்தக் காலத்தில் பெரும்பாலான ஆண்களுக்கு சமையல் சங்கதி தெரியாது.

வீட்டுல சாப்பாடு சத்தாவும், ருசியாவும் இருந்தால், நோய்நொடி எட்டி கூடப்பார்க்காது. நல்ல ருசியா சமைக்கத் தெரிஞ்சவங்களுக்கு “முக்கால் மருத்துவர்” என்று பட்டமே தரலாம்.

அவசர, அவசரமா சாப்பிடற ஃபாஸ்ட்ஃபுட் கலாசாரம் கிரமத்துப் பக்கமும், பரவிவிட்டது. குச்சியில குத்தி சாப்பிடறதும், சில்வர் கரண்டியில, எடுத்துச் சாப்பிடுவது தான் கலச்சாரம் நாகரிகம் என்று நினைக்கவேண்டாம். ஒவ்வோர் உணவையும் முறைப்படி சாப்பிடுவாதால் தான், அதோட முழுபலனும் நமக்குக் கிடைக்கும். இந்த மண்ணில் எப்படி சாப்பிடணும் என்பதையே 12 வகையாக பிரித்து வைத்து வாழ்ந்திருக்கீறார்கள்.

 1. மிகச் சிறிய அளவே உட்கொள்வது – அருந்துதல்
 2. பசி தீர சாப்பிடுவது – உண்ணல்
 3. நீர் சேர்ந்த பண்டத்தை ஈர்த்து உண்பது – உறிஞ்சுதல்.
 4. நீரில் உணவை உறிஞ்சி பசி நீங்க உட்கொள்வது – குடித்தல்.
 5. பண்டங்களைக் கடித்து உட்கொள்வது – தின்றல்.
 6. ரசித்து மகிழ்வது – துய்த்தல்.
 7. நாக்கினால் துழாவி உட்கொள்ளுதல் – நக்கல்
 8. முழுவதையும் ஒரே வாயில் உறிஞ்சினால் – உறிதல்.
 9. நீர்ப்பண்டத்தைச் சிறுகக் குடிப்பது – பருகல்.
 10. பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொண்டால் – மாந்தல்.
 11. கடியப்பண்டத்தைக் கடித்து உண்பது – கடித்தல்.
 12. வாயில் வைத்து அதிகம் அரைக்காமல் உண்பது – விழுங்கல் . . . .

இப்படி மடை நூலில் விளக்கமாக கூறியிருக்கிறார்கள்.

போன மாதம் தஞ்சாவூர் பக்கம் போன போது அந்த மெஸ்ல சாப்பிட்ட கோழிக்குழம்பு பிரமாதம். சிதம்பரம் போகும்போது, புத்தூர் கடையில ஒரு மணி நேரம் காத்திருந்து திருப்தியா சாப்பிட்டேன் என்று நண்பர்கள் இப்படியெல்லாம் பேசியிருப்பதை கேட்டிருப்போம். இப்படி நல்ல பெயர் வாங்கின ஹோட்டல்கள் உள்ளே போய் கொஞ்சம் உன்னிப்ப கவனிச்சுப் பார்த்தீர்கள் என்றல் இவர்கள் சமைக்க பயன்படுத்துவது விறகு அடுப்பில்தான் சமைக்கிறார்கள் என்ற ரகசியம் உங்களுக்கு தெரியவரும்.

”சைவமா இருந்தாலும், அசைவமாக இருந்தாலும். . . விறகு அடுப்புல சமைக்கும்போது தான் ருசியும், கைமணமும் அதிகமாக இருக்கும். குறிப்பாக விறகு அடுப்பில் கோழிக்கறியை நல்லெண்ணெய் விட்டு வறுக்கும்போதுதான் கொழுப்பு பக்குவமாக மிதந்து வரும். இந்தக் கோழிக்குழம்பு வாசம், ரோட்டில் செல்லும் ஆட்களையும் கூட சுண்டி இழுக்கும். இந்தப் பக்குவம் கேஸ் அடுப்புல சமைக்கும்போது வராது. அதனால்தான், எங்கள் ஓட்டலுக்கு வரவர கூட்டம் அதிகமாக வருகிறது, என்றால்  அவை விறகு அடுப்பின் மகிமை என்று விளக்கமாக சொன்னார்.

என்னதான் கேஸ் அடுப்பு, மின்சார அடுப்பு என்று வந்தாலும் இப்போதும்கூட சித்த மருத்து, ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்க, விறகு அடுப்பைத்தான் பயன்படுத்துகிறார்கள். என்கள் தயாரிப்புகள் விறகு அடுப்பு மூலமே தயாரிக்கப்படுகின்றது என்று சித்த மருந்து பாட்டிலின் மேல் எழுதி ஒட்டி வைத்திருக்கிறார்கள்.

                                                                                                     நன்றி

                                                       மாத்தி யோசி – மண்புழு மன்னாரு -பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj