Skip to content

கோதுமை விளைச்சலை அதிகரிக்க புதிய திட்டம்

லங்கஸ்டர் பல்கலைக்கழகம்,சர்வதேச மக்காச்சோளம் மற்றும் கோதுமை மேம்படுத்தல் மைய (CIMMYT)  விஞ்ஞானிகள் தற்போது பயிர் விளைச்சலை அதிகரிக்க Rubisco என அழைக்கப்படும் இயற்கையான நொதியினை பயன்படுத்த உள்ளனர்.

இந்த நொதியினை பயன்படுத்தினால் கண்டிப்பாக மகசூல் அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த நொதியினை பயன்படுத்தி 25 மரபணுவினை உருவாக்கி விளைச்சலை அதிகரிக்க உள்ளனர். ஒளிச்சேர்கையினை அதிகரிக்க Rubisco என்சைம்கள் உதவும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கோதுமையில் புதிய என்சைம்கள் சேர்வதால் 20% வரை ஒளிச்சேர்க்கை அதிகரிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த Rubisco வினையூக்கி பண்புகள் கோதுமையில் ஒரு அற்புதமான பணியினை தூண்டுகிறது. உலகம் முழுவதும் இருக்கும் இனங்களான அரிசி, மரவள்ளி மற்றும் சோயாவில் அதிக ஒளிச்சேர்க்கை மற்றும் உயிரிபொருள் உற்பத்தி நடைபெறும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

http://www.sciencedaily.com/releases/2016/01/160128155105.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj