மூலக்கூறு முறை, உணவு பயிர்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது

0
1742

தற்போது அறிவியல் அறிஞர்கள் விவசாய முறையில் மாற்றத்தை கொண்டு வர பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் பழைய தாவரத்தின் மூலக்கூறினை அடிப்படையாகக் கொண்டு புதிய முறையில் விவசாயம் மேற்கொள்ள ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வினை Carl R.Woese Institute for Genomic Biology, University of Illinois at Urbana-Champaign ஆராய்ச்சியாளர்கள் செய்து வருகின்றனர்.

தாவரத்தின் மரபணுவினை பயன்படுத்தி பயிர்களின் நீண்டகால வாழ்க்கை சுழற்சிக்கு இனப்பெருக்கத்தை கொண்டு வர உள்ளனர். பெருகி வரும் உலக மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு மற்றும் எரிபொருள் தேவைகளை பூர்த்தி செய்ய அதிக மகசூல் பெற ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர். தாவரங்கள் தங்களின் மரபணுவினை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் ஆராய்ச்சியாளர்கள் புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்த உள்ளனர். இந்த அனைத்து பணிகளும் மூலக்கூறினை அடிப்படையாக கொண்டு செயல்படுத்தப்படுகிறது.

இந்த முறையில் குறிப்பிட்ட மரபணுவினை கண்டறிய ஒளிரும் அல்லது கதிரியக்க சாயத்தை பயன்படுத்தி, டிஎன்ஏ பெரிய அளவிற்கு பிரித்தெடுத்து, ஒரு நேரத்தில் ஒரு சில மாதிரிகளில் இருந்து பதிய தாவர மரபணுவினை உற்பத்தி செய்கின்றனர். இந்த முறையில் மிக குறைவான காலத்தில் அதிக உணவு பொருள்களை உற்பத்தி செய்ய உள்ளனர்.

http://www.sciencedaily.com/releases/2016/01/160126175039.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here