சந்தன மரத்தில் பூச்சிக்கட்டுப்பாடு

2
3620

தண்டு துளைப்பான்

தண்டு துளைப்பானின் பூச்சியியல் பெயர் சுசீரா காபியே ஆகும். இப்பூச்சி தாக்கிய இளஞ்செடிகளின் தண்டுகளில் துவாரங்கள் காணப்படும்.

தத்துப் பூச்சி

தத்துப் பூச்சியின் பூச்சியியல் பெயர் ஜேசஸ் இண்டிகஸ் ஆகும். ஸ்பைக் என்னும் நச்சுயிரி நோயை இப்பூச்சி சந்தன மரங்களில் பரப்புகின்றன.

இலைவீக்கப் பேன்

இலைவீக்கப்பேன் பூச்சியியல் பெயர் குரோட்டோனோதிரிப்ஸ் டிவிடி ஆகும். இப்பேன்கள் இலைகளைச் சுரண்டியும், சாற்றை உறிஞ்சியும் இலை வீக்கங்கள் அல்லது முடிச்சுகளை ஏற்படுத்துகின்றன.

இலைப் பிணைப்பான்

இலைப் பிணைப்பானின் பூச்சியியல் பெயர் காக்கோசியா மிகாகேயனா ஆகும், இலைகளை ஒன்றாகப் பிணைந்து புழு அதனுள் இருந்து கொண்டு உண்டு சேதமுண்டாக்கும்.

அனைத்துப் பூச்சிகளையும் கட்டுபடுத்த ஒரு லிட்டர் நீருக்கு 1 மி.லி. மானோகுரோட்டோபாஸ் மருந்து என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

                                                                                           நன்றி

                                                                              வேளாண் காடுகள்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

2 COMMENTS

  1. எனது சந்தன மரத்தில் அதிகமாக ஆக்ரா பூச்சிகள் தாக்கியுல்லது அதனை எவ்வாறு தடுப்பது தயவுசெய்து கூறவும்…

    • கடுக்காய் தூளுடன் சற்று வேப்பதலையை அரைத்து 4 மடங்கு தண்ணீருடன் செடி மேல் காலை மாலை 2 நாட்கள் தெளியுங்கள். கசப்புக்கு அவை வெளியேறிவிடும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here