Skip to content

இந்தியாவில் நூற்றாண்டுக்கு பழமையான மர தவளை!

1870-ல் காணப்பட்ட ஒரு மரத்தவளை தற்போது மீண்டும் இந்தியாவின் வடகிழக்குப் மலைப்பகுதி காடுகளில் பெருமளவு காணப்படுகிறது.

பிரிட்டனின் இயற்கை ஆராய்ச்சியாளர் T.C. Jerdon 1876-ல் வட இந்தியாவில் உள்ள டார்ஜீலிங்கிற்கு வருகை புரிந்தார். அப்போது அவர் மரதவளைகளை சேகரித்து பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வைத்துள்ளார்.

தற்போது இந்த வகை மர தவளைகள் மீண்டும் வட இந்தியாவில் காணப்படுவதாக இந்த ஆய்வின் முன்னனி ஆய்வாளர் மற்றும் நீர்நில ஆய்வாளர் S.D. Biju தெரிவித்துள்ளார். தனக்கு கொடுத்த வாய்ப்பின் மூலம் இதை அவர் கண்டறிந்ததாக அவர் கூறியுள்ளார்.

காட்டுப் பக்கம் நடைபயிற்சி மேற்கொண்டபோது மாலை நேரங்களில் தனித்துவமான தவளையின் சத்தத்தை கேட்டதாக S.D. Biju கூறினார். அங்கு கண்டுபிடித்த தவளைகளை இந்திய ஆய்வகங்களில் உள்ள பழைய தவளைகளோடு ஒப்பிட்டு பார்த்தனர். அதிலிருந்து அவர்கள் தொலைந்த ஒரு தவளை இனத்தின் பரிணாம மாற்றத்தால் உருவான தவளை தான் இந்த புதிய மர தவளை என்பதை S.D. Biju மற்றும் அவரது குழுவினர் கண்டறிந்தனர்.

Biju–வின் கருத்துப்படி உலகில் மொத்தம் 7500 நீர்நில வாழ்வன உள்ளன. அதில் 400 மர தவளை இனங்கள் ஆகும். 17 பிரிவுகள், அல்லது பேரினங்களும், பொதுவாக பயன்படுத்தப்படும் வார்த்தைகளும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது Biju கண்டுபிடித்த மர தவளை இனத்துடன் சேர்ந்து 18 பேரினங்கள் காணப்படுகின்றன.

இது மரங்களில் பிரத்தியேகமாக இனப்பெருக்கமடைகின்றன. தனித்துவமான வெளி தோற்றங்கள் மற்றும் எலும்பு அம்சங்களை கொண்டுள்ளன. பிஜு மற்றும் அவரது அணியினர் இந்த மர தவளை கண்டுபிடித்ததற்காக மிகவும் உற்சாகம் அடைந்தனர்.

http://edition.cnn.com/2016/01/22/asia/india-tree-frog-rediscovered/

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj