பாசிகளிலிருந்து உயிரி எரிபொருள்

0
2184

டெலாவேர் பல்கலைக்கழகத்தில் உள்ள இணை விஞ்ஞானியான ஜெனிபர் ஸ்டீவர்ட் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு மற்றும் பிற தீங்கு தருவனவற்றை வெளியேற்ற அல்லது குறைக்க நிலையான பாசிகளை அடிப்படையாக கொண்ட உயிரி எரிபொருட்களை உருவாக்க முயற்சி செய்து வருகின்றனர். இந்த முயற்சி வெற்றியடைந்தால் பல பிரச்சனைகள் தீரும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

ஆல்காக்களிலிருந்து சோளம், கரும்பு போன்ற மற்ற தாவரங்களை விட ஏக்கருக்கு 12 மடங்கு அதிகமாக பயோடீசல் தயாரிக்க முடியும். மேலும் இது உணவு தாவரங்கள் வளரும் நிலத்தை எடுத்துக்கொள்வதில்லை. பாலைவனங்கள் போன்ற வறண்ட நிலப்பகுதிகளிலும் இது வளரக்கூடியது. கடல் பாசிகள் கடல் தண்ணீரில் வளரக்கூடியது. ஆனால் பாசிகளை பயன்படுத்தி இயற்கை எரிபொருள்கள் தயாரிப்பது  எளிதான காரியமாக இருக்காது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

பாசிகளின் அதிக வளர்ச்சியால் வளிமண்டலத்தில் தற்போது உள்ளதை விட கரியமில வாயு குறைய ஆரம்பிக்கிறது. கரியமில வாயு குறைவது நல்லது தான் ஆனால் அளவுக்கு அதிகமாக குறைந்தால் தாவரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படும். பிறகு பாட்டில்களில் அடைக்கப்பட்ட கார்பன் டை ஆக்சைடை வாங்கும் நிலை ஏற்பட்டுவிடும். இதனால் நிதி நெருக்கடி மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்படையும்.

மின் உற்பத்தி நிலையங்களில் வெளியேறும் புகைகள் வழியாக வெளியேறும் நைட்ரிக் ஆக்சைடு மற்றும் கார்பன் டை ஆக்சைடினால் மிகவும் நச்சு ஏற்பட்டு மனித சுகாதாரத்தை சேதப்படுத்தும் மற்றும் உணவு பயிர்கள் அழிக்கும் போது அமில மழை, ஏற்படவும் வாய்ப்பு உள்ளது இதை தடுப்பதற்காக ஆற்றல் உற்பத்தி தொழிற்சாலைகளில் பாசிகளை வளர்க்கலாம் என்று பல விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

http://biomassmagazine.com/articles/12712/university-of-delaware-researchers-develop-algae-biofuels

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here