திட்டமிடப்பட்ட விவசாயம் தானிய உற்பத்தியை அதிகரிக்கும்

0
1795

American Institute of Biological Sciences ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் படி தற்போது உலகளவில் ஏற்பட்டிருக்கும் காலநிலை மாறுபாட்டினால் சோயா பீன்ஸ் மற்றும் தானியவகைகள் உற்பத்தி பெருமளவு பாதிப்புக்குள்ளாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அமெரிக்காவின் Midwest விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக தானிய உற்பத்தியில் சோளம் 30%, சோயா பீன்ஸ் 30% ஐ அமெரிக்க விவசாயிகள் உற்பத்தி செய்கின்றனர். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாறுபாடு இந்த உற்பத்தியை பெருமளவு குறைத்துள்ளது. இதற்கு  மற்றொரு காரணம் மாறுபட்ட விவசாய மேலாண்மை முறையாகும். ஏனென்றால் செயற்கை உரத்தை மண்ணில் பயன்படுத்தியதால் அதன் தன்மையை அழித்து வருகின்றனர்.

2

இதனால் அந்த மண் நாளடைவில் அதன் நன்மை தரும் பயனை இழந்து விடுகிறது. இந்த பாதிப்பால் எதிர்காலத்தில் உலகில் பல்வேறு வகையான உணவு தட்டுப்பாடுகள் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த பிரச்சனையினை தீர்ப்பதற்கு பலதுறை விஞ்ஞானிகள் முயற்சி எடுத்து வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டிருக்கும் உணவு தட்டுப்பாட்டினை குறைப்பதற்கு ஒரே வழி இயற்கை முறையில் விவசாயத்தை மேற்கொள்ளவேண்டும். அதனை தீர்க்க மற்றொரு வழி சரியான திட்டமிட்ட விவசாய முறை, இருக்கும் தண்ணீர் வளங்களை பயன்படுத்தி அதிக விளைச்சலை பெறுவது எப்படி என்பதை அறிந்து அதன்படி செயல்படுத்தினால் விவசாய உற்பத்தி பெருக வாய்ப்பு உள்ளது.

http://www.sciencedaily.com/releases/2015/12/151216134412.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here