நிலக்கரி, பெட்ரோலியம் மற்றும் பிற ஆதாரங்கள், படிம எரிபொருட்களில் இருந்து கரியமிலவாயு வெளியேற்றம் சுமார் 280 லிருந்து 400 ஆக அதிகரித்துள்ளது. இந்த co2 அளவு அதிகரிப்பினால் தாவரங்களின் ஈரப்பதம் அதிகரிக்கிறது. இதனால் தாவரங்கள பாதுகாப்பாக இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தற்போது இதனை பற்றி பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
இச்சோதனையானது முதன் முதலில் அட்லாண்டிக் கடலோர பகுதியில் உள்ள உவர் சதுப்பு நிலங்களில் 1987-ல் ஆரம்பிக்கப்பட்டது. ஆராய்ச்சியாளர்கள் இச்சோதனைக்கு சி3 புல் வகை தாவரத்தினையும் சி4 புல் வகை தாவரத்தினையும் எடுத்து நடத்தப்பட்ட ஆய்வில் 95% சி3 தாவரங்கள் co2 வினால் தாக்கம் பெற்று நன்கு வளர்ச்சி பெற்றது தெரிய வந்துள்ளது. இந்த சி3 புல்லில் பிபிஎம் 705 ஆக எகிறியது.
இதேப்போன்று ஆராய்ச்சி மேற்கொண்டதில் co2 மட்டும் தாவர வளர்ச்சிக்கு உதவுவதில்லை pardosa littoralis சிலந்திகளின் கழிவுகள் தாவர வளர்ச்சிக்கு உதவுகிறது என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆய்வாளர்கள் ஓர் ஆண்டு காலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி தாவரத்தின் வளர்ச்சிக்கு pardosa littoralis வகை சிலந்திகளும் முக்கிய காரணம் என்பது கண்டறியப்பட்டது. co2 தவிர முக்கியமான ஈரநிலம், சுற்றுச்சூழல் நைட்ரஜன் படிவு, உப்புத்தன்மை போன்றவற்றினாலும் தாவரம் வளர்ச்சி அடைகிறதாம். உணவு சங்கிலி மற்றும் உயிரி உற்பத்தி இடையே இணைப்புகளை பற்றி ஆய்வாளர்கள் தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர்.
http://www.sciencedaily.com/releases/2015/12/151210101819.htm
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli