Skip to content

வட அயர்லாந்தில் கர்லிவ் பறவை இனம் அழிந்து வருகிறது

வட அயர்லாந்தில் புகழ்பெற்ற பறவையான கர்லிவ் (Wading Bird) பறவை இனம் தற்போது அபாய நிலையில் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த பறவைகள் ஐரோப்பா நாடுகளில் மிகப்பெரிய பறவை இனமாகும்.

இதேப்போல் இங்கிலாந்திலும் இந்த பறவை இனம் மிக குறைவாக உள்ளதாக தகவலறிக்கை கூறுகிறது. இதனால் RSPBNI அறிக்கைப்படி தற்போது இந்த பறவை இனங்கள் சிவப்பு பட்டியலில் இடம் பிடித்திருப்பது பெரும் பிரச்சனையாகி உள்ளது.

இந்த கர்லிவ் பறவைகள் மக்கள் தொகை அதிகரிப்பினால் அதிக பாதிப்படைந்துள்ளது. தற்போது இங்கிலாந்தின் சிவப்பு பட்டியலில் இது 4-ம் இடத்தில் உள்ளது. 1980-ல் வடக்கு அயர்லாந்தின் நடுப்பகுதியில் சுமார் 87% பறவைகள் காணப்பட்டது.

அதுமட்டுமல்லாது வட அயர்லாந்து மலைகளில் Fermanagh பறவைகள் இனம் அங்குள்ள மக்கள் தொகையில் தற்போது 10%  உள்ளது. 1980 ஆண்டுகளில் இந்த பறவை இனங்களின் ஜோடிகள் சுமார்   80, ஆனால் இப்போது 39 ஜோடிகள் மட்டுமே உள்ளது. சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட பறவைகளில் கீரின்லாந்தின் வெள்ளை நிற வாத்து மற்றும் கடல் பறவைகளும் அடங்கும்.

http://www.bbc.com/news/uk-northern-ireland-34988955

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj