Skip to content

புவி வெப்பமாதலால் சோளம் விளைச்சல் குறைந்தது

University of Illinois college of Agriculture மற்றும் consumer and Environmental Science-ன் ஆராய்ச்சியாளர்கள் தற்போது மேற்கொண்ட ஆராய்ச்சியில் சோளத்தில் உயிரி எரிபொருள் சக்தி அதிகம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த சோள எத்தனால் பயன்பாட்டினால் வரும் 2020-ம் ஆண்டில் கலிபோர்னியாவில் 10% வாகனங்களில் Green House வாயுவின் தாக்கத்தை குறைக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

ஆனால் சோள எத்தனால் உற்பத்தியினால் கலிபோர்னியாவில் பாதிப்புகள்தான் அதிகம் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது. இதற்கு என்ன காரணம் என்று பார்த்தபோது வெப்பமயமாதலே என்பது தெரிய வந்துள்ளது. இதனால் சோளம் மற்றும் சோயா விளைச்சல் பெருமளவு பாதிப்பை உண்டாக்கும் என்பது தெரியவந்துள்ளது. தற்போதைய காலகட்டத்தின் படி சுமார் 40% சோள விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வரும் 2080-ம் ஆண்டிற்குள் கலிபோர்னியா அதிகம் வெப்பம் அடைந்து விடும். இதனால் நிலத்தில் எந்தவித பயிரினையும் வளர்க்க முடியாத சூழல் உருவாகும் என்று கூறப்படுகிறது.

இவ்வாறு உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டால் விலை கடுமையாக உயரும் அதுமட்டுமல்லாது உயிரி எரிசக்தி ஆற்றலையும் உற்பத்தி செய்யவும் முடியாது.

http://www.sciencedaily.com/releases/2015/11/151117143536.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj