ஸ்காட்லாந்தில் Corncrakes பறவை இனங்கள் குறைந்துள்ளது

0
1339

ஸ்காட்லாந்தில் தற்போது ஈரமான மற்றும் குளிர்கால வானிலை காரணமாக இந்த ஆண்டு Corncrakes பறவை இனங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

ஸ்காட்லாந்தின் RSPB கணக்கெடுப்பின்படி கிட்டதட்ட ஐந்தில் ஒரு பங்கு Corncrakes எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டின் கணக்கெடிப்பின்படி 1,289 பறவைகள் இருந்தது. ஆனால் தற்போது 1,069 பறவைகள் மட்டுமே உள்ளன. இந்த Corncrakes  பறவைகள் ஆப்பிரிக்காவிலிருந்து இடம் பெயர்ந்து ஸ்காட்லாந்திற்கு வந்தவையாகும்.

RSPB அளித்த தகவலறிக்கைப்படி 1,069 பறவைகளில் தற்போது 333 ஆண் இன பறவைகள் உள்ளன. கடந்த 36 ஆண்டுகளை ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவே ஆகும். இதற்கு காரணம் காலநிலை மாறுபாடே ஆகும். இருந்தாலும் இன்னும் இந்த வகை இனங்கள் Highlands மற்றும் Islands பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.

http://www.bbc.com/news/uk-scotland-highlands-islands-34832770

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here