கோதுமை பயிரினை பாதுகாக்க புதிய நோய் எதிர்ப்பு மரபணு

0
1569

சிட்னி தாவரவியல் பல்கலைக்கழகம் மற்றும் CSIRO, CIMMYT பல்கேரியா அறிவியல் சீன அகாடெமி இணைந்து தற்போது கோதுமை பயிரில் ஏற்படும் நோயினை கட்டுப்படுத்த புதிய மரபணுவினை கண்டறிந்துள்ளனர். இந்த மரபணு Lr67. இது மூன்று எதிர்ப்பு சத்துக்களை வழங்கும் ஆற்றல் கொண்டது. இந்த மரபணுவின் முக்கிய பணி நுண்துகள் பூஞ்சை காளான் மற்றும் துருவ நோய்களிலிருந்து கோதுமை பயிரினை முழுவதும் பாதுகாப்பதே ஆகும். தற்போது Nature Generics வெளியிட்டுள்ள அறிக்கையில் கோதுமை அனைத்து நாடுகளிலும் முக்கிய கலோரி உணவாக உள்ளது. இதனை பாதுகாக்க வேண்டியது விஞ்ஞானிகளின் கடமை. அடுத்த 50 ஆண்டுகளில் கோதுமை வளர்ச்சியினை அதிகரிக்கும் வகையில் தற்போது பூஞ்சைகளை எதிர்க்கும் மரபணுவினை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

சிட்னி பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தற்போது கண்டறியப்பட்டுள்ள புதிய மரபணு பல்வேறு நோய்க்கிருமிகளை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது என்று நிரூபித்துள்ளனர். அவர்கள் இயற்கையான மரபணுவினை பயன்படுத்துவதால் கோதுமைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறி உள்ளனர்.

உலக கோதுமை உற்பத்தியில் பெரும்பாலும் துருவ நோய்களின் பாதிப்பே அதிகம். இதனை சரிகட்ட ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலியா அரை பில்லியன் டாலர்களை செலவழித்து வருகின்றது. தற்போது விஞ்ஞானிகள் கண்டறிந்த இந்த மரபணு அந்த செலவினை கட்டுப்படுத்துகிறது. அதுமட்டுமல்லாது எதிர்காலத்தில் புதிய கோதுமை வகைகளை பயிரிடுவதற்கும் இந்த Lr67 மரபணு நமக்கு உதவும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

http://www.sciencedaily.com/releases/2015/11/151110094034.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here