நிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை

5
42683

இந்திய வேளாண்மை  முறையினை பற்றி ஆராய்ச்சி செய்து பார்த்ததில், நம்முடைய விவசாய முறைகள் அனைத்தும் இயற்கையை சார்ந்தே இருந்தது என்பது உண்மை.

பழங்காலத்தில் நிலத்தடி நீர் வழிகளை கண்டறிவதில் பிரபலமான அறிவியல் பிரமுகர்களான மனு, சரஸ்வத் மற்றும் பாஸ்கரா சூரி இருந்தனர். இவர்களை விட வராகமித்திரர் தன்னுடைய பிரிஹட் சம்ஹிதா என்ற புத்தகத்தில் 54-வது அத்தியாயத்தில் 125 வசனங்கள் மூலம் நிலத்தடி நீர் எங்கு உள்ளது என்பதை பற்றி விரிவாக கூறி உள்ளார். இவர் தன்னுடைய அத்தியாய வசனத்தில் பூமிக்கு அடியில் உள்ள நீரினை எளிதாக கண்டுபிடிக்கும் முறையினை குறிப்பிட்டுள்ளார்.

அவையாவன:-

  1. மரங்கள்
  2. எறும்பு – மலைகள் (புற்றுகள்)
  3. பாறைகள்
  4. பாறை நிறம் மற்றும் மண் இயல்பு

வராகமித்திரர் தன்னுடைய புத்தகத்தில் பூமிக்கு அடியில் உள்ள தண்ணீரை பல்வேறு திசைகள் கொண்டு சுட்டிக்காட்டியுள்ளார். அத்திசைகளுக்கு பழங்காலத்தில் கடவுளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதை தெரிவித்துள்ளார்.

2

மகாபாரதத்தில் அர்ஜுனர், பீஷ்மர் மீது அம்பு எய்து அவரை அம்பு படுக்கையில் சாய்த்த போது அவருக்கு தாகம் எடுத்தது. அவருடைய தாகத்தை போக்க அர்ஜுனர் பூமியில் ஓர் அம்பை எய்தார் அப்போது பூமியில் இருந்து தண்ணீர் மிக வேகத்துடன் வெளியேறி அவருடைய தாகத்தை தீர்த்தது. அந்த இடத்தில் மருத மரம் வளர்ந்தது. தற்போதும் மருத மரம் உள்ள பகுதிகளில் கண்டிப்பாக நிலத்தடி நீர் இருக்கும்.

3

அவர் கூறிய தகவல்களின்படி நாவல் மரம் உள்ள பகுதிகளில் கண்டிப்பாக நீர் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார் பெரும்பாலும் நாவல் மரம் இருக்கும் பகுதிகளில் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் சுவையான நிலத்தடிநீர் இருக்கும்.. ஏனென்றால் இந்த மரத்தின் வேர் பகுதிகள் மழைகாலங்களில் பெய்யும் தண்ணீரை தனக்குள்  ஈர்த்து வைத்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டது என்று தற்போது அறிவியல் அறிஞர்கள் ஆய்வு செய்து நிரூபித்துள்ளனர். மேலும் புற்றுகள் உள்ள பகுதிகள் மற்றும் வெள்ளை நிற தவளை (தேரை) இருக்கும் இடங்களிலும், வெள்ளை நிற பூக்கள் கொண்ட காட்டு மரங்கள் வளரும் பகுதிகளிலும் கண்டிப்பாக நிலத்தடிநீர் இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.

4

அதுமட்டுமல்லாது அத்திமரம், கடம்ப மரம், நொச்சி மரம், அர்ச்சுனா மரம், பிலுமரம், புளியமரம், மருத மரம், வேம்பு மரம், வில்வம் போன்ற மரங்கள் இருக்கும் பகுதிகளில் கண்டிப்பாக தண்ணீர் இருக்கும் என்று வராகமித்திரர் தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது நம் நாட்டில் அதிகமான நீர் வளங்கள் தென் இந்தியா பகுதிகளில்தான் உள்ளது என்று பழங்கால அறிவியல் பிரமுகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

http://jayasreesaranathan.blogspot.in/2009/08/science-of-detecting-underground-water.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

5 COMMENTS

  1. நான் தேங்காயில் நீரோட்டம் பார்ப்பேன் இதுவரை கிணறு மற்றும் போர்களுக்காக 1000த்திற்கும் மேற்பட்ட பாய்ண்ட் டுகளை கான்பித்துள்ளேன் என் செல் நம்பர்;9629570651

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here