தாவரங்களில் CRISPR மாறுபாடு உடைய புதிய டி.என்.ஏ வை அறிமுகப்படுத்த கூடாது

0
16186

பல ஆண்டுகளாக,  விஞ்ஞானிகள் அதிக அளவில் பயிர்களை வளர்க்கவும்,  பூச்சிகள் அல்லது நோய்களை எதிர்க்கவும் ஆய்வகத்தில் தாவரங்களின்  டி.என்.ஏ –வை மாற்றம் செய்து வருகின்றனர். அவர்கள் இந்த செயல்முறையை CRISPR (Clustered Regularly Interspaced Short Palindromic Repeats)  உதவியுடன்   விரைவுப்படுத்தி வருகின்றனர்.

இப்போது கொரிய ஆய்வாளர்கள்  குழு CRISPR-ல் மாற்றங்களை ஏற்படுத்தி புதிய மரபணுக்கள் உருவாக்க முடியும் என்று கூறியுள்ளதாக நேச்சர் பயோடெக்னாலஜி இந்த வார ஆய்வில் வெளியிட்டுள்ளது.

Cas9 ஒரு செல்லில் இருந்து வேறு ஒரு செல்லிற்கு எப்படி மாறுகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பிறகு ஆராய்ச்சியாளர்கள் புகையிலை, அரிசி, மற்றும் கீரை ஆகியவற்றின் மரபணுக்களை தங்களின் நுட்பத்தின் மூலம் சோதனை செய்தனர். அதில் அவர்களுக்கு 46 சதவிகிதம் வெற்றிகரமான முடிவுகள் கிடைத்தன.

2 (1)

CRISPR  நொதியை பயன்படுத்தி பயிர்களை மாற்றம் செய்வது இதுவே முதல் முறையாகும். சில நிபுணர்கள் CRISPR-மாற்றப்பட்ட உணவு இன்னும் ஐந்து ஆண்டுகளில் உங்கள் தட்டில் இருக்கலாம் என்று கணித்துள்ளனர்.

ஆனால் இந்த புதிய தொழில் நுட்பத்தை கொண்டுவர, மரபணு மாற்றப்பட்ட உணவுமுறையை சுற்றியுள்ள முழு விவாதம் விலக வேண்டும். இது இயற்கையான வழிமுறை அல்ல என்பதால் பெரும்பாலான நாடுகள் இது நிரந்தரமானது அல்ல என்று கூறுகின்றனர். இந்த தொழில் நுட்பத்தில் எந்த வெளிநாட்டு மரபணு மாற்றத்தையும் பயன்படுத்தவில்லை இயற்கையாக நடக்கும் மரபணு மாற்றங்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர் என்பதால், அது சாத்தியமானது என்று சில நாடுகள் கூறுகின்றனர். இது போல் இதை சுற்றியுள்ள முழு விவாதத்தை தவிர்த்தால் இந்த பயிர்களை செயல்படுத்த முடியும்.

3 (1)

எனினும், கட்டுப்பாட்டாளர்கள் இன்னும் CRISPR உட்பட அதிநவீன தொழில்நுட்பங்களை அனைவரையும் கவரும் வகையில் மாற்ற CRISPR வரையறையை மாற்ற உள்ளனர்.

தாவர மரபியல் நிபுணர்கள் சிலர் இதில் நம்பிக்கை இல்லை என்கிறார்கள். தாவர இனக்கலப்பு ஆராய்ச்சியாளர்கள் இந்த நுட்பம் மிகவும் வெற்றிகரமானதாக இருக்கும் என்கிறார்கள். மரபணுக்களை மாற்றுவதின் மூலம் நோய்களை காட்டுப்படுத்தலாம், பயிர்களை ஆபத்திலிருந்து பாதுகாத்து பயிர்களை சேமிக்கலாம், எதிர்கால தலைமுறையினரை பாதுகாக்க இந்த முறை உதவியாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் மிகவும் நம்பிக்கையாக கூறுகின்றனர்.

http://www.popsci.com/new-crispr-variation-wont-introduce-new-dna-to-plants

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here