நிலத்தடி நீர் ஓட்டமும் பாதிப்பும்

1
3837

நிலத்தடி நீர் ஒட்டத்தினை கண்டறிய விஞ்ஞானிகள் அடிக்கடி நிலத்தடி மேற்பரப்பின் விளைவு மற்றும் நீர்நிலைகளை மதிப்பிட கிளாசிக்கல் கணித சூத்திரங்களை  பயன்படுத்தி பகுப்பாய்வு செய்கின்றனர். இவ்வாறு நீர் கணக்கீடு செய்வதால் நீரின் ஓட்டத்தில் ஏற்படும் மாற்றத்தை கண்டறிய முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நிலத்தடி நீர் ஓட்டம், கண்காணிப்பு, பெரும்பாலும் நிலத்தடி சோதனை விஞ்ஞானிகள் தற்போது மிகச் சிறந்த தொழில்நுட்ப கணினியினைக் கொண்டு நிலத்தடி நீரின் அளவு, தன்மை மற்றும் எவ்வளவு காலத்திற்கு இங்கு நன்னீரானது நமக்கு கிடைக்கும் என்பதை பற்றியும் தெளிவாக கூறுகின்றனர். அது மட்டுமல்லாது நிலத்தடி நீர் ஓட்டத்தின் தரம் பொதுவாக சில மாதங்கள் அல்லது ஒரு வருடத்திற்கு அளவிடப்படுகிறது. நிலத்தடி நீர் பொதுவாக மேற்பரப்பு நீரைக் காட்டிலும் மிகவும் தூய்மையானதாக இருக்கும்.

அதுமட்டுமல்லாது அந்த தண்ணீரில் அதிகமான மினரல் ஆற்றல் காணப்படுகிறது. ஏனென்றால் பூமியின் அடியில் உள்ள பாறைகள் மற்றும் மண்ணின் இறுக்கத்தால் தண்ணீர் இயற்கையாகவே வடிகட்டுதல் நிகழ்ச்சியினை மேற்கொள்கிறது. ஆனால் நாம் இந்த இயற்கை வடிகட்டுதலை தற்போது தடுத்துவருகிறோம். அவையாவன:-

  1. நில திடக் கழிவு அகற்றுதல்
  2. திரவ கழிவு அகற்றல் கலங்கள்
  3. நஞ்சுக் கழிவுகள் ஊடுருவல்
  4. இராசயனங்கள் மூலம் நெடுஞ்சாலை
  5. எரிவாயு நிலையம்
  6. பெட்ரோலியம் மொத்தமாக சேமிக்கும் வசதிகள்
  7. நகர்புற வெள்ளநீர் ஊடுருவல்

மேற்குறிப்பிட்ட செயல்களை நாம் தடுத்தாலே நமக்கு நல்ல தண்ணீர் கிடைக்கும் என்பது சாத்தியமே. இந்த வகை பிரச்சனைகளிலிருந்து விடுபட நிலவியல் விஞ்ஞானிகள் பல்வேறு வகையான கணினி தொழில்நுட்பத்தை கொண்டு விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here