சிரியாவை போன்று இந்தியாவிலும் நடக்குமா?

0
3294

சிரியா மக்கள் வறுமை மற்றும் உள்நாட்டில் ஏற்பட்ட போரின் காரணமாக சரியான உணவு இல்லாமல் ஜெர்மனி மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு குடி பெயர்ந்த வண்ணம் உள்ளனர். இவ்வாறு செல்பவர்கள் பலர் கடலில் மூழ்கி இறக்கின்றனர். சிலர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர் இதேபோல் தற்போது இந்தியாவிலும் வறுமை காரணமாக பலர் இறந்து வருகின்றனர் என மெர்லின் பிரான்சிஸ் என்ற ஆங்கில பத்திரிகையாளர் கூறுகின்றார்.

 1

கடந்த மாதம், தற்போது புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேடக் மாவட்டத்தில் பாலநரசய்யா என்ற விவசாயி வறட்சி ஏற்பட்டதால் பருத்தி விவசாயத்தை மேற்கொள்ள முடியாமல் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவர் தற்கொலை செய்து கொண்டதின் முக்கிய காரணம் வறட்சி பயம் மட்டுமல்ல. விவசாயம் செய்வதற்கு கொத்தடிமைகளாக வேலைக்கு அமர்த்தியதாகும். இதற்கு முக்கிய காரணம் அவர்கள் விவசாயத்திற்கு வாங்கிய கடனை செலுத்த முடியாததே ஆகும்.

தேசிய குற்றப்பதிவு புள்ளி விவரங்களின் படி 1995 மற்றும் 2014 க்கும் இடையில் கிட்டதட்ட நான்கு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர் என்று கூறப்பட்டுள்ளது.

3

இந்திய விவசாய அமைப்பின் புள்ளி விவரப்படி 2015 வரை 1.37 கோடி விவசாயிகளில் இரண்டு மற்றும் மூன்று மடங்கு விவசாயிகள் வறுமையின் காரணத்தாலும், வறட்சி ஏற்பட்ட காரணத்தாலும் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மரத்வாடா மற்றும் விதர்ப்பா மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

மகாராஷ்டிராவில் மட்டும் 90 லட்சம் விவசாயிகள் வறட்சி மற்றும் கொத்தடிமைகளாக இருந்ததால் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்று புள்ளி விவரம் கூறியுள்ளது.

https://in.news.yahoo.com/is-a-syria-like-crisis-brewing-in-india-too-142738354.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here