ஆப்பிரிக்க ஸ்பைடர் பூவின் நன்மைகள் !

0
1647

இந்த ஆப்பிக்கா ஸ்பைடர் பூ ஆசியாவில் தோன்றியதாக நினைக்கிறார்கள். ஆனால் இந்த பூ உண்மையில் ஆப்பிரிக்காவில் தான் தோன்றியது. இந்த பூ வெப்பமண்டலம் மற்றும் துணை வெப்பமண்டலத்தில் வளரக்கூடியது. இந்த தாவரம் சுமார் நான்கு அடி உயரம்  வளரும். இந்த தாவரத்தின் இலை மே மாதத்தில்  வளரும். பூக்கள் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில்  வளரும். அதனுடைய விதை ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் தோன்றும்.

2

ஆப்பிக்கா ஸ்பைடர் பூவின் இலை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது. இந்த இலையில்  கனிமங்கள் , கால்சியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்து உள்ளது. அதுமட்டுமல்லாமல் இரும்பு, தாமிரம், மெக்னீசியம், சோடியம் மற்றும் துத்தநாகமும் அடங்கியுள்ளது.

3

அஸ்கார்பிக் அமிலம் மற்றும் பீட்டா கரோட்டின் வடிவில் வைட்டமின் சி அடங்கியுள்ளது. ஃபிளாவனாய்டுகளின் (rutin, quercetin, luteolin, hesperidin ) அதிகமாக இந்த தாவரத்தில் அடங்கியுள்ளது. இந்த தாவரத்தின் விதைகளில்  பாமிட்டிக், ஸ்ட்டியரிக், லினோலிக், ஒலீயிக் மற்றும் arachidic கொழுப்பு அமிலங்கள் அடங்கி உள்ளது.

வாத நோய், கீழ்வாதம், தோலில் ஏற்படும் கொப்புளம் போன்றவற்றுக்கு இந்த தாவரத்தின் இலைகள் மிகவும் உதவியாக இருக்கிறது. வேர்கள் நெஞ்சு வலிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இலைகளை உண்பதால் வயிற்றுப்போக்கு நின்றுவிடுகிறது. சிறுநீரக கோளாறுகளுக்கும் இந்த தாவரத்தின் இலை பயனுடையதாக இருக்கிறது.

http://herbs-treatandtaste.blogspot.in/2012/07/african-spider-flower-important-plant.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here