Skip to content

ஆலிவ் எண்ணெயின் நன்மைகள்!

ஆலிவ் எண்ணெயில்  சுகாதார நன்மைகள்அதிகமாக அடங்கியுள்ளன. தினமும்  ஆலிவ் எண்ணெயை உட்கொள்வதால்  நிறைய நன்மைகள் இருக்கின்றன என்று ஆய்வில் வெளியிடப்பட்டுள்ளது. ஆலிவ் எண்ணெய் நம்முடைய வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவியாக இருக்கும்.

ஆலிவ் எண்ணெயில்  வெண்ணெய் நீக்கப்பட்டுள்ளது . அதுமட்டுமல்லாது , வயதான பின்பு கொழுப்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதை  ஆலிவ் எண்ணெய் உட்கொள்வதால் தடுக்க முடியும்  என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பல வழிகளில் ஆலிவ் எண்ணெய் ஆரோக்கியத்துக்கு உதவியாக இருக்கிறது. எனவே, ஆலிவ் எண்ணெயை ஒவ்வொரு நாளும் குறைந்தது இரண்டு தேக்கரண்டி  எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இதய   மருத்துவர்கள்  பரிந்துரைக்கிறார்கள்.

உடலிற்கு  எவ்வித  நோய்களும்  வராமல்  ஆலிவ் எண்ணெய் தடுக்கிறது.

எ.கா: கரோனரி இதய நோய், ஆபத்து காரணிகள் குறைப்பு, புற்றுநோய் தடுப்பு,  நோயெதிர்ப்பு மற்றும் எரிச்சலான எதிர்வினை மாற்றங்கள் உட்பட அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கக் கூடியதாக இருக்கிறது.

கீழ்க்காணும் பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது.

அழற்சி

ஆலிவ் எண்ணெயில் அதிகமாக ஃபைட்டோநியூண்ட்ரியண்ட்டின் இருப்பதால், அழற்சி, மார்பக புற்றுநோய் போன்ற நோய்கள் வராமல்  குறைக்கிறது.

7 (1)

இதய நோய்:

ஆலிவ் எண்ணெய்  இரத்தத்தில் உள்ள  கொழுப்பு, LDL-கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகள் அளவுகளை குறைக்கிறது. கொழுப்பு இணைப்பு உருவாகுவதை  ஆலிவ் எண்ணெய் தடுக்கிறது. அதனால்,  ஆலிவ் எண்ணெய் சாப்பிட்டால் இதய நோய்  வருவதை குறைக்கலாம்.

உடல் பருமன்:

ஆலிவ் எண்ணெயில் கலோரி அதிகமாக இருப்பதால்  உடல் பருமனைக்  குறைக்க உதவுகிறது.

எலும்புப்புரை:

ஆலிவ் எண்ணெய்  உட்கொள்வதால் எலும்பில் உள்ள  கால்சியம்  மற்றும் சுண்ணம்பை  மேம்படுத்தி எலும்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மிகவும் உதவியாக இருக்கும்.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj