Skip to content

பிரண்டையின் நன்மைகள்!

பிரண்டை அற்புதமான சுகாதார நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் கொண்டதாக திகழ்கிறது. பிரண்டை படர் கொடியின் வகையை சார்ந்தது. பிரண்டையின் தாவரவியல் பெயர் Cissus quadrangularris ஆகும். இந்த படர்கொடி எல்லா இடங்களிலும் வளரும் . அதுமட்டுமல்லாது வீட்டுத் தொட்டியிலும் நன்றாக வளரக்கூடியது.

பிரண்டையில் மருத்துவ குணங்கள் அதிகமாக இருக்கிறது. அஜீரணம், எலும்பு முறிவுகள் மற்றும் சுளுக்கு போன்ற பிரச்சனைக்கு மிகவும் ஏற்றதாக இருக்கிறது. மேலும்  மூல வியாதி, மாதவிடாய் பிரச்சனை, காது வலி போன்றவற்றுக்கு வீட்டிலேயே சிறந்த மருந்தாக பிரண்டை பயன்படுகிறது.

பிரண்டையின்  பயன்கள்:        

3 (3)        

  • இரைப்பை அழற்சி, அஜீரணம் மற்றும் பசியின்மை போன்ற அனைத்து செரிமானம் பிரச்சினைகளுக்கும் பிரண்டை துவையல் மிகவும் சிறந்த மருந்தாக இருக்கிறது.
  • சிறிய சுளுக்கு மற்றும் எலும்பு முறிவுகளுக்கு பிரண்டை நல்ல தீர்வாக இருக்கிறது. இந்த பிரண்டையின் சாற்றை, மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து கடாயில் வெப்பப்படுத்தி சுளுக்கு மற்றும் எலும்பு முறிவின் மேல் பயன்படுத்தலாம். பிறகு கலவையில் உள்ளவற்றை சிறிய சுளுக்கு மற்றும் எலும்பு முறிவுள்ள இடத்தில் பூச வேண்டும். இதனால் அந்த பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
  • மூலம் மற்றும் குடற்புழு நீக்குவதற்கு பிரண்டை நல்ல மருந்தாக விளங்குகிறது.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

2 thoughts on “பிரண்டையின் நன்மைகள்!”

Leave a Reply

error: Content is protected !!