பச்சோந்தி தாவரத்தின் நன்மைகள்

0
2280

பச்சோந்தி தாவரம் (Houttuynia cordata) பழமையான சீன மூலிகை ஆகும். பச்சோந்தி தாவரம் கிழக்கு ஆசியாவின் மலைப்பகுதிகளில் காணப்படுகிறது. இந்த தாவரம் 20 மற்றும் 80 செ.மீ வரை வளரும். தண்டின் நுனி பகுதி செங்குத்தாக வளரும்.
பச்சோந்தி தாவரத்தின் இலைகள் மாறி மாறி வளர்ந்து இருக்கும். இலை அகன்ற இதய வடிவில் இருக்கும். 4 – 9 செ.மீ நீளமும், 3-8 செ. மீ அகலமும் கொண்டதாக இருக்கும்.

2

இந்த தாவரத்தின் பூக்கள் கோடைக்காலத்தில் வளர கூடியவை , பூக்கள் பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். பச்சோந்தி தாவரத்தின் இலையை சமையலுக்காக பயன்படுத்துகிறார்கள். இந்த தாவரம் வியட்நாமில் தான் அதிகமாக இருக்கிறது. மேலும் இந்த தாவரம் மூலிகையை அழகுப்படுத்தவும் உதவுகிறது. இந்த தாவரத்தின் இலை மிகவும் சுவையாக இருக்கும். அதனால் இதனை “மீன் புதினா” என்றும் அழைப்பர். இந்த தாவரத்தை ஒவ்வொரு நாடுகளிலும் வெவ்வேறு விதமாக சமைக்கிறார்கள். ஆனால், பழங்குடியினர் தான் பச்சோந்தி தாவரத்தை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். பச்சோந்தி தாவரம் 2500 மீ உயரத்தில் இமயமலையில் காணப்படுகிறது.

3

தாவரத்தின் பயன்கள்:

  • பச்சோந்தி தாவரத்தின் இலை சாறு வயிற்று போக்குக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
  • வேர்கள் வயிற்று புண்களுக்கு பயன்படுகிறது.
  • வேர்கள் வேகவைத்த சாறு தசைகள் வலிக்கு பயனுள்ள தீர்வாக இருந்து வருகிறது.
  • பச்சோந்தி தாவரம் அலர்ஜிக்கு மிகவும் சிறந்ததாக இருக்கிறது.

4

பச்சோந்தி தாவரம் நிமோனியா அல்லது கடுமையான சுவாச நோய் (சார்ஸ்)க்கு பயனுள்ளதாக இருக்கிறது.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here