Skip to content

கோடிகளில் புரளும் கங்கை நதி வடிநில ஆணையம்!

2008-ம் ஆண்டில் கங்கை, தேசிய நதியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2009-ம் ஆண்டு பிப்ரவரியில், கங்கையைத் தூய்மைப்படுத்தி அதைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் தேசிய கங்கை நதி வடிநில ஆணையம் உருவாக்கப்பட்டது.

பிரதமர் தலைமையில் இயங்கும் இந்த ஆணையத்தில்… பல்வேறு மத்திய அமைச்சர்களும்; கங்கை பாயும் 11 மாநிலங்களில், உத்தர்காண்ட், உத்தரபிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில முதல்வர்களும்; அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் உறுப்பினர்களாக உள்ளார்கள். 2009-ம் ஆண்டு அக்டோபரில் இந்த ஆணையத்தின் முதல் கூட்டம் நடந்தது. 2010-ம் ஆண்டு பட்ஜெட்டில் 500 கோடி ரூபாயும், 2014-15- ம் ஆண்டு பட்ஜெட்டில் 1,500 கோடியும், இந்த ஆண்டு மே மாதத்தில் 20 ஆயிரம் கோடியும் (2020 வரை) கங்கையைத் தூய்மைப்படுத்தவும், அதை மீட்டெடுக்கவும் இந்த ஆணையத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj