திண்டுக்கல் மாவட்டத்தில் மலைப்பட்டி, மம்மானியூர், கோம்பை உள்ளிட்ட மலையடிவார கிராமங்களில் பாரம்பரிய ரகமான பழுபாகற்காய் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. இக்காயை பல்பகால், கரிபாகல், நெய்பாகல் எனவும் அழைக்கப்படும். இது கொடி வகைப்பயிராக இருந்தாலும். . . பெரும்பாலும் உடுபயிராக சாகுபடி செய்யப்படுவதால் தனியாக பந்தல் அமைக்கும் செலவில்லை. இது கசப்புச்சுவை கொண்டிருக்காது. இதை காளான் மற்றும் இறைச்சி சமைக்கும் விதத்தில் சமைத்தால் நல்ல ருசியாக இருக்கும். இதற்கு திண்டுக்கல் சந்தையில் கிராக்கி உள்ளது. விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ 60 ரூபாய் என கொள்முதல் செய்யப்பட்டு, கிலோ 200 ருபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, பெங்களூரில் இதற்கு நல்ல சந்தை வாய்ப்பு உள்ளது. இதைப் பெரும்பாலும் இயற்கை துறையில்தான் விளைவிக்கப்படுகிறார்கள். இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகியவற்றை இது கட்டுபடுத்தும் என்கிறார்கள்.
நன்றி
பசுமை விகடன்
really
Good messages getting from u sir. Thanks.