காய்களை, பழங்களைச் சேகரிக்கும் முறைகள்

1
3625

  1. மரத்தின் கீழே இயற்கையாக விழுந்து கிடக்கும் காய்களை அல்லது பழங்களைச் சேகரித்தல், உதாரணம்: வேம்பு, நாவல், இலந்தை, தேக்கு, சில்வர், ஓக், குமிழ்.
  2. மரத்தைக் கைமூலம் உலுக்கி கீழேவிழும் காய்களை, பழங்ளைச் சேகரித்தல். இயற்கையாக காய்கள் விழாத மரங்களில் இம் முறையின் மூலம் காய்களைச் சேகரிக்கலாம்.
  3. மரத்தின் மீது ஏறி கிளைகளை பலமாக அசைந்து காய்களை விழவைத்து சேகரிப்பது. உதாரணம்: அயிலை, ஆயா, புளி, இலவம், ஏணி மூலமோ அல்லது நேரடியாகவோ மரத்தில் ஏறலாம்.
  4. காய்கள் அதிகமுள்ள கிளைகளை உடைத்து, உடைந்த கிளைகளை விழவைத்து சேகரித்தல், உதாரணம்: சவுக்கு, தைலம்.
  5. நீண்ட குச்சியின் நுனியில் கொக்கி அல்லது சிறிய கத்தியைப் பொருத்தி அவற்றின் மூலம் காய்களை மரத்திலிருந்து நேரடியாகச் சேகரித்தல், உதாரணம்: கொன்றை, வாதநாரயணன், இயல்வாகை, சீமைக்கருவேல், இலவம்.

சேகரித்த காய்களில் கலந்திருக்கும் குச்சி, இலை மற்றும் முதிராத காய்கள், பூச்சி தாக்கிய காய்கள், பூஞ்சாணம் போன்றவை இருப்பின் அவற்றைத் தனியே பிரித்து எடுத்துவிடவேண்டும்.

       சேகரித்த காய்களை விதை பிரிக்கும் வரை மிகவும் பக்குவமாகச் சேமித்து வைக்கவேண்டும். துணி அல்லது சாக்குப் பைகளில் நிரப்பி குளிர்ச்சி மற்றும் உலர்ந்த நிழற்பாங்கான இடங்களில் காய வைக்க வேண்டும். நேரடியாக தரையில் இடுக்கி வைக்காமல், மரக்கட்டைகள் போட்டு அதன்மேல் அடுக்கி உலர வைக்க வேண்டும்.

நன்றி

வேளாண் காடுகள்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here