மரங்களும் மற்றும் அதன் பயன்கள்

5
70493

மரங்கள் பல வகைகள் உள்ளன. ஒவ்வொருவரின் விருப்பத்திற்கேற்ப, பலப்பல சூழ்நிலைகளுக்கேற்ப, அவரவருக்குத் தேவையான மரங்களைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். எந்தெந்த மரங்கள் நமது சூழ்நிலைக்கேற்ப மற்றும் நாம் தேவைக்கு ஏற்ப வளர்க்கலாம் என்பதை பார்ப்போம் வாருங்கள்.

கோடை நிழலுக்கு  வேம்பு, தூங்குமூஞ்சி, புங்கன், பூவரசு, மலைப்பூவரசு, காட்டு அத்தி, வாத மரம். 
பசுந்தழை உரத்திற்கு  புங்கம், வாகை இனங்கள், கிளைரிசிடியா, வாதநாராயணன், ஒதியன், கல்யாண முருங்கை, காயா, சூபாபுல், பூவரசு. 
கால்நடைத் தீவனத்திற்கு  ஆச்சா, சூபாபுல், வாகை, ஒதியன், தூங்குமூஞ்சி, கருவேல், வெள்வேல். 
விறகிற்கு  சீமைக்கருவேல், வேலமரம், யூகலிப்டஸ், சவுக்கு, குருத்தி, நங்கு, பூவரசு, சூபாபுல். 
கட்டுமான பொருட்கள்  கருவேல், பனை, தேக்கு, தோதகத்தி, கருமருது, உசில், மூங்கில், விருட்சம், வேம்பு, சந்தனவேங்கை, கரும்பூவரசு, வாகை, பிள்ளமருது, வேங்கை, விடத்தி. 
மருந்து பொருட்களுக்கு  கடுக்காய், தானிக்காய், எட்டிக்காய் 
எண்ணெய்க்காக  வேம்பு, பின்னை, புங்கம், இலுப்பை, இலுவம் 
காகிதம் தயாரிக்க  ஆனைப்புளி, மூங்கில், யூகலிப்டஸ், சூபாபுல் 
பஞ்சிற்கு  காட்டிலவு, முள்ளிலவு, சிங்கப்பூர் இலவு 
தீப்பெட்டித் தொழிலுக்கு  பீமரம், பெருமரம், எழிலைப்பாலை, முள்ளிலவு. 
தோல்பதனிடவும், மை தயாரிக்கவும்  வாட்டில், கடுக்காய், திவி – திவி, தானிக்காய் 
நார் எடுக்க  பனை, ஆனைப்புளி 
பூச்சி மருந்துகளாகப் பயன்படுத்த  வேம்பு, புங்கம், ராம்சீதா, தங்க அரளி 
கோயில்களில் நட  வேம்பு, வில்வம், நாகலிங்கம், தங்க அரளி, மஞ்சளரளி, நொச்சி, அரசு 
குளக்கரையில் நட  மருது, புளி, ஆல், அரசு, நாவல், அத்தி, ஆவி, இலுப்பை 
பள்ளிகளில் வளர்க்க  நெல்லி, அருநெல்லி, களா, விருசம், விளா, வாதம், கொடுக்காப்புளி, நாவல் 
மேய்ச்சல் நிலங்களில் நட  கருவேல், வெள்வேல், ஓடைவேல், சீமைக்கருவேல், தூங்குமூஞ்சி
சாலை ஓரங்களில் நட  புளி, வாகை, செம்மரம், ஆல், அத்தி, அரசு, மாவிலங்கு 
அரக்கு தயாரிக்க  குசும், புரசு மற்றும் ஆல் 
நீர்ப்பரப்பில் (கண்மாய்) பயிரிட  கருவேல், நீர்மருது, நீர்க்கடம்பு, மூங்கில், வேலிக்கருவேல், நாவல், தைல மரம், ராஜஸ்தான் தேக்கு, புங்கன், இலுப்பை மற்றும் இலவமரம். 

 

5 COMMENTS

  1. இலுப்பை மரம் கட்டுமான பொருட்கள் கதவுகள் ஜன்னல்கள் போன்றவை செய்ய பயன்படுமா ?
    நன்றி

  2. இலுப்பை மரம் கட்டுமான பொருட்கள் கதவுகள் ஜன்னல்கள் போன்றவை செய்ய பயன்படுமா ? சற்று விளக்கவும்

    நன்றி…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here