விவசாயம் – ஆன்டிராய்டு மென்பொருள்

2
14559

10384894_835578803126943_8437000153992573727_nதர்மபுரியில் 25.7.2014 நடைப்பெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாளில் விவசாயம் மென்பொருளை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திரு.விவேகானந்தன் அவர்கள் முன்னிலையில் விவசாயிகளிடைே அறிமுகப்படுத்தி பேசிட ஒரு வாய்ப்பு அமைந்தது.

நாங்கள் 21ம் தேதி முகநூலில் விவசாயம் பற்றிய ஆன்டிராய்டு மென்பொருளை பதிவிடவும். அதை தர்மபுரி மாவட்ட விவசாயத்துறை இணை இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) திரு.மதுபாலன் அவர்கள் அந்த மென்பொருளை பயன்படுத்திப்பார்த்துவிட்டு நேரில் வரச்சொன்னார். அன்றே நேரில் பார்த்து இந்த மென்பொருளை மக்களிடையே கொண்டு சேர்க்க நாங்கள் தயார் என்று அறிவித்ததோடு மட்டுமல்லாமல் மாவட்ட விவசாயத்துறை அலுவலரிடமும் அறிமுகம் செய்துவைத்தார். அதன் பின் நேற்று வெள்ளிக்கிழமை விவசாயத்துறை குறைதீர் கூட்டத்தில் இந்த மென்பொருளை பற்றிய அறிமுகத்தினை மாவட்ட விவசாயிகளிடமும், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் இதர அதிகாரிகள் முன்னிலையிலும் விவசாயம் மென்பொருளை பற்றிய அறிமுக குறிப்பினை எடுத்துக்கூறினேன். விவசாயிகளிடைய இந்த மென்பொருள் ஆர்வம் நிச்சயம் அதிகரித்திருக்கும். ஏனெனில் கணினி பயன்பாடு என்பது அவர்களுக்கு சற்று சிரமமான விசயம்.

ஆனால் அலைபேசிகளில் எல்லாமே குறும்படங்களின் வழியே நடப்பதால் இதை மேலாண்மை செய்வது வெகு எளிது என்று கூறியதோடு செயல்படுத்தியும் காட்டினேன்.


இது நிச்சயம் விவசாயிகளிடையே நம்பிக்கையை அளித்திருக்கும் என்று நம்புகிறேன். இறுதியாக மாவட்ட ஆட்சியர் இந்த மென்பொருள் எந்த இயங்குதளங்களில் இயங்கும் என்றும் குறைந்த விலை என்ற விலையில் கிடைக்கும் என்று ஒரு அறிக்கையை கேட்டிருக்கிறார். விரைவில் அதை சமர்பிக்க உள்ளேன்.

எங்களுக்கு இந்த நேரத்தில் வாய்ப்பு வழங்கிய மாவட்ட ஆட்சியர் திரு.விவேகானந்தன் அவர்களுக்கும், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியார் திருமதி.சுசீலா மதுபாலன் அவர்களுக்கும், விவசாயத்துறை இயக்குநர் மட்டும் உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் எங்களது நன்றிகளை தெரிவித்தேன்.
மேலும்
எங்களின் இந்த மென்பொருளை பார்த்து உடனே வரச்சொல்லி அதன் விபரங்களை கேட்டு உடனடியாக மாவட்ட ஆட்சியர் முன் கொண்டு சென்ற திரு.மதுபாலன் (தரக்கட்டுப்பாடு இணை இயக்குநர்) அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றி!

எங்களின் மென்பொருள் அறிமுகம் பற்றிய செய்தித்தாளில் வெளியிட்டு உதவிய பத்தரிக்கையாளர்களுக்கும் நன்றி!

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here