Skip to content

வேளாண் பட்டயப்படிப்புகள் (Diploma in Agriculture)-ஒரு கண்ணோட்டம்

தமிழ்நாடு அளவில், வேளாண்மை பட்டய‌ப்படிப்பு என்பது இரண்டு வருட படிப்பு ஆகும். தமிழ் நாட்டில் வேளாண் பட்டய‌ப்படிப்புகளுக்கு, வேளாண்மை பட்டப்படிப்பை போன்றெ மோகம் அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு அளவில், 2020 -21 ஆம் கல்வி ஆண்டுகான வேளாண் பட்டய‌ப்படிப்பு படிப்பதற்கான சாத்தியக் கூறுகளை இத்தொகுப்பில் விரிவாக காணலாம்.  … வேளாண் பட்டயப்படிப்புகள் (Diploma in Agriculture)-ஒரு கண்ணோட்டம்

இளநிலை வேளாண் பட்டப்படிப்புகள்: ஒரு கண்ணோட்டம்

தமிழ்நாடு அளவில், வேளாண்மை பட்டப்படிப்பு என்பது மருத்துவம், பொறியியல் மற்றும் கால்நடை அறிவியியல் போன்று மிக முக்கியமான பட்டப்படிப்பு ஆகும். தமிழக அளவில், 2020-21ம் கல்வி ஆண்டுகான வேளாண் இளநில பட்டப்படிப்பு படிப்பதற்கான சாத்தியக்கூறுகளை இத்தொகுப்பில் விரிவாகக் காணலாம். தமிழ்நாட்டில் பல்வேறு பல்கலைகழகங்கள் வேளாண் இளநிலை பட்டப்படிப்புகளை பயிற்றுவிக்கின்றன.… இளநிலை வேளாண் பட்டப்படிப்புகள்: ஒரு கண்ணோட்டம்

மரவள்ளி கிழங்கின் நாற்றங்கால் செய்முறை

தமிழகத்தில் அதிக அளவு பயிரிடக்கூடிய பயிராக மரவள்ளி திகழ்கிறது. இதன் கிழங்கானது கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின்-சி நிறைந்து காணப்படுகிறது. வளரும் நாடுகளுக்கு மரவள்ளியானது ஒரு பிரதான பயிராக கருதப்படுகிறது. மேலும் இதன் கிழங்கானது சமையலுக்கும் மற்றும் பல வணிக முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களான ரவா, ஜவ்வரிசி,  மைதா மற்றும்… மரவள்ளி கிழங்கின் நாற்றங்கால் செய்முறை

கீரனூர் ஒடுகம்பட்டி கொழிஞ்சிப் பண்ணையில் மார்ச் 27, 28, 29 ‘ஒருங்கிணைந்த பண்ணையம்’ பயிற்சி

ஒருங்கிணைந்த பண்ணை புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் ஒடுகம்பட்டி அருகேயுள்ள குடும்பம் – கொழிஞ்சிப் பண்ணையில் மார்ச் 27, 28, 29 ஆகிய தேதிகளில் ‘ஒருங்கிணைந்த பண்ணையம்’ பயிற்சி நடைபெறவுள்ளது. முன்னோடி இயற்கை விவசாயிகள், வல்லுநர்கள் பயிற்சி வழங்கவிருக்கிறார்கள். தங்குமிடம், உணவு, களப்பயணமும் உண்டு. முன்பதிவு அவசியம். மூன்று நாள்களுக்கான… கீரனூர் ஒடுகம்பட்டி கொழிஞ்சிப் பண்ணையில் மார்ச் 27, 28, 29 ‘ஒருங்கிணைந்த பண்ணையம்’ பயிற்சி

பாபநாசம் சித்தர் அறிவியல் கலைக்கூடத்தில் மூலிகை முற்றம்

மூலிகை முற்றம் திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் தெப்பக்குளம் அருகிலுள்ள சித்தர் அறிவியல் கலைக்கூடத்தில் மார்ச் 14, 15 ஆகிய தேதிகளில் ‘மூலிகை முற்றம்’ பயிற்சி நடைபெறவுள்ளது. மூலிகைகளை அடையாளம் காணல், கைமருந்து செய்முறை, மூலிகைத்தோட்டம் அமைத்தல், அஞ்சறைப்பெட்டிக்கடை (நாட்டு மருந்துக்கடை) நடத்துதல் போன்றவை குறித்து சித்த மருத்துவர் மைக்கேல்… பாபநாசம் சித்தர் அறிவியல் கலைக்கூடத்தில் மூலிகை முற்றம்

பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் கறவை மாடு வளர்ப்பு

கறவை மாடு வளர்ப்பு சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் மார்ச் 17-ம் தேதி ‘காளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல்’, 19-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 24-ம் தேதி ‘கறவை மாடு வளர்ப்பு’, 27-ம் தேதி ‘பசுந்தீவனச் சாகுபடி’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன.… பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் கறவை மாடு வளர்ப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் இயற்கை என்.பி.கே உரம் தயாரிப்பு பயிற்சி

திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி, ஸ்ரீரமணா பாலிடெக்னிக் கல்லூரியில் மார்ச் 15-ம் தேதி, முனைவர் உதயகுமார் வழங்கும் ‘இயற்கை என்.பி.கே உரம் தயாரிப்பு’ பயிற்சி நடைபெறவுள்ளது. முன்பதிவு அவசியம். பயிற்சிக் கட்டணம் ரூ.100. தொடர்புக்கு, செல்போன்: 78450 70500/ 97888 56276.

கோபிசெட்டிப்பாளையத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

காளான் வளர்ப்பு ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம், மைரடா வேளாண் அறிவியல் நிலையத்தில் மார்ச் 27-ம் தேதி ‘காளான் வளர்ப்பு’, 31-ம் தேதி ‘உள்நாட்டு மீன் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு அவசியம். பயிற்சிக் கட்டணம் ரூ.150. தொடர்புக்கு, தொலைபேசி: 04285 241626.

கன்னியாகுமயில் சமையல் எரிவாயு தயாரிப்பு, மாடிதோட்டம் அமைக்கப்பயிற்சி

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் மார்ச் 21-ம் தேதி ‘மாடிதோட்டம் அமைத்தல்’, ‘சமையலறைக் கழிவுகளிலிருந்து எரிவாயு தயாரித்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு அவசியம் தொடர்புக்கு, தொலைபேசி 04652-246296

தூத்துக்குடி மாவட்டத்தில் காளான் மதிப்பு கூட்டுதல் பயிற்சி!

தூத்துக்குடி மாவட்டம், கிள்ளிக்குளம் வேளாண்மை தொழில் முனைவோர் காப்பகம், வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் டிசம்பர் 30ம் தேதி ‘காளான் மதிப்பு கூட்டுதல்’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம். பயிற்சிக்கட்டணம் ரூ. 400. தொடர்புக்கு: 99761 15109.

error: Content is protected !!