Skip to content

அக்ரிசக்தி விவசாயம் 2021 ஆய்வுப்போட்டி

அக்ரிசக்தி சார்பாக விவசாயம் மற்றும் கால்நடை மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கான போட்டி!

நிபந்தனைகள்

விவசாயிகளை நேரடியாக பேட்டி எடுக்க வேண்டும். அதில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை என்ன, அதற்கான தீர்வுகள் என்ன என்பதை கட்டுரை வடிவில் கொடுக்க வேண்டும்.

போட்டிக்கான மையக்கரு:

1. விதை முதல் அறுவடை வரை பயிர்கள் சார்ந்த விவசாயப் பிரச்சனைகள் மற்றும் அதன் தீர்வுகள்

பிரிவுகள்

காலநிலை மாற்றம், களைகள், பூச்சி, நோய், தொழில்நுட்பங்கள் பற்றாக்குறை, வேலையாட்கள் பிரச்சனை, இடுபொருட்கள் பற்றாக்குறை,

2. விவசாய அறுவடைக்குப் பின்னான பிரச்சனைகள் மற்றும் அதன் தீர்வுகள்

அறுவடை பின்சார் தொழில்நுட்பம் , தொழில்நுட்பங்களின் பங்கு, விளைபொருட்கள் விலையின்மை,

3. கால்நடை வளர்ப்பு சார்ந்த பிரச்சனைகள் மற்றும் அதன் தீர்வுகள், பிரதான வகைகளுக்குள் துணை வகைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன

கால்நடை
கால்நடை பொருளாதாரம், கால்நடை தற்சார்பு பொருளாதாரம், கால்நடை வளர்ப்பில் உள்ள சிக்கல்கள், கால்நடை வளர்ப்பில் தொழில் நுட்பங்களின் பங்கு,
இயற்கை விவசாயத்தில் நாட்டின பசுக்களின் பங்கு, திவன விதை உற்பத்தி மற்றும் விற்பனை வழிமுறைகள் போன்ற தலைப்பில் கட்டுரையை யுனிக்கோட் அல்லது லதா எழுத்துருவில் தட்டச்சு செய்து அனுப்பலாம்.

விதிமுறை

1.இந்தப் பிரச்சனைகளுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு விவசாயியை பேட்டி எடுத்திருக்க வேண்டும். ஒரு குழுவினர் குறைந்த பட்சம் 5 மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளை பேட்டி எடுத்திருக்க வேண்டும்.

2.குறைந்த பட்சம் மூன்று பேர் இணைந்து கட்டுரையை சமர்ப்பிக்க வேண்டும்.

3.அனுப்ப வேண்டிய  முகவரி: https://docs.google.com/forms/d/1xcaszCU12OVy0yxwL6pbgIC8As27sGzHUbqF_-S1yww/

4.அக்டோபர் மாதம் இறுதி நாள் 30ம் தேதிக்குள் கட்டுரையை அனுப்ப வேண்டும்.

5.ஆய்வுக்கட்டுரை பிடிஎப் வடிவில் இருக்கவேண்டும்
6.நிச்சயம் விவசாயிகளை நேர்காணல் கண்டு அவர்களை சந்தித்ததற்கான விவசாயிகளின் ஆதாரங்களை இணைக்கவேண்டும். நேர்காணல் போட்டோ அல்லது காணொளிகளை இணைக்கலாம்

இப்போட்டியில் சிறந்த படைப்பாக தேர்ந்தெடுக்கப்படும் குழுவினருக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj