Skip to content

திசு வாழை

திசு வாழைக்கன்றுகள் 5 – 6 இலைகள் கொண்ட தரமான கன்றுகளையேப் பயன்படுத்த வேண்டும். ஒரு கன்றுக்கு 25 கிராம் என்றளவில் சூடோமோனாஸ் இட வேண்டும். 45 x 45 x 45 செமீ அளவுள்ள குழிகளில் 10 கிலோ தொழு உரம், 250 கிராம் வேப்பம் புண்ணாக்கு இட்டு வேர்களுக்கு சேதம் ஏற்படாமல், நடவு செய்ய வேண்டும்.

உரமிடல்

       நடவு செய்த 2, 4, 6, 8 மாதங்களில் கீழ் கண்ட அளவு உரங்களைப் பிரித்து இட வேண்டும், வாழைக்கு உரமிட வேண்டும்.

உரம் கிராம்/செடி
தழை 160 (யூரியா – 348)
மணி 50 (சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் – 305)
சாம்பல் 400
மூரியேட் ஆப் பொட்டாஷ் -640

நீர்வழி உரமிடல்

பின்வரும் அளவில் நீரில் கரையும் உரங்களை சொட்டு நீர் பாசன அமைப்பின் மூலம் அளிக்கவும்.

வாரம் (நடவு செய்த நாளிலிருந்து தழை(%) மணி(%)* சாம்பல்(%)
9-18 (10 வாரம்) 30 100 20
19-30 (12 வாரம்) 50 40
31–42 (12 வாரம்) 20 32
43-45 (3 வாரம்) 8

 

முழு அளவு மணி சத்தினை நடவு செய்த இரண்டாவது மாதத்தில் மண்ணில் இடவும்.

நுண்ணூட்டசத்து தெளிப்பு

திருச்சி தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் பனானா சக்தி என்ற நுண்ணூட்ட கலவையினை 2 சதவிகிதம் என்றளவில் 4,5 மற்றும் 6 வது மாதங்களில் இலைவழி தெளிப்பாக அளித்தல் வேண்டும்.

நன்றி

வேளாண்மை உதவி இயக்குநர்

தருமபுரி

1 thought on “திசு வாழை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj