உழுவோரை சிறப்பு செய்த கம்பன்
கம்பர் உழவுத்தொழிலை மிகவும் உயர்த்திக் கூறுகிறார், அதை திருக்கை வழக்கம் என்று சிறப்பிக்கிறார், மற்றோர் இடத்தில் மன்னர்களை தூக்கி எறிந்து உழவர்களை உயர்த்திப் பேசுகிறார் மேழி பிடிக்கும் கை வேல்வேந்தர் நோக்குங்கை ஆழிதரித்தே அருளும்கை சூழ்வினையை நீக்குங்கை என்றும் நிலைக்கும்கை நீடூழி காக்கும்கை“என்று கம்பர் குறிப்பிடுகிறார்