Skip to content

விடைபெற்றது பருவ மழை!

தமிழகத்தில், வட கிழக்கு பருவ மழை, 2017 அக்., 27ல் துவங்கியது. இறுதியாக, நவ., 30ல், ‘ஒக்கி’ புயலாக மாறி, கன்னியாகுமரி முதல் குஜராத் வரை,  கன மழை கொட்டியது.
இந்நிலையில், 80 நாட்களாக நீடித்த, வட கிழக்கு பருவ காற்றும், பருவ மழையும், நேற்று விடை
பெற்றது. இது குறித்து, வானிலை ஆய்வு மையம்  கூறியுள்ளதாவது:
வட கிழக்கு பருவ மழை, ஆண்டுதோறும், 44 செ.மீ., பெய்ய வேண்டும். இந்த ஆண்டு, 40 செ.மீ., மழை பெய்துள்ளது. அதாவது, இயல்பை விட,  9 சதவீதம் குறைவாக பெய்துள்ளது.
இனி வரும் நாட்களில், இரவிலும், அதிகாலையிலும் கடுங்குளிர் நிலவும். பகலில் மிதமான வெயில் இருக்கும். மலைப் பகுதிகளில், தரையில் பனி உறைய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அந்த மையம் அறிவித்துள்ளது.

Leave a Reply

error: Content is protected !!