Site icon Vivasayam | விவசாயம்

விவசாயிகளே கொட்டப்போகுது மழை, முன்கூட்டியே தொடங்குது தென்மேற்குப் பருவமழை! உழவுக்கு தயாராகுங்க, மழை நீரை சேகரியுங்கள்

கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்டப் பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது.
இதுகுறித்து தனியார் வானிலை ஆராய்ச்சி ஆய்வாளர் செல்வகுமார் கூறுகையில், “கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, விருதுநகர், மதுரை, நெல்லை உள்ளிட்டப் பகுதிகளில் இன்று இரவு நல்ல மழை பெய்யும்.

அந்தமானில் வருகின்ற 19 அல்லது 20-ம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்க உள்ளது. கேரளாவில் வருகின்ற 22-ம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கும். குறிப்பாக, இந்த ஆண்டு 10 நாள்களுக்கு முன்னரே, தென்மேற்குப் பருவமழை தொடங்க உள்ளது. இந்நிலையில், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, விருதுநகர், கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் 23-ம் தேதி முதல் தென்மேற்குப் பருவமழை நன்கு பெய்யும்.
ஆனால், கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி போன்ற பகுதிகளில் வருகின்ற 12-ம் தேதி முதலே தொடர்ந்து மழை பெய்யும். தமிழகத்தின் மற்றப் பகுதிகளிலும் வெப்பச் சலன மழை பெய்யும். படிப்படியாக, மழையின் அளவு அதிகரிக்கும். 14-ம் தேதி முதல் சென்னையிலும் மழை பெய்யும். கடந்த ஆண்டு போல, இந்த ஆண்டு வறட்சி நிலவாது. இந்த ஆண்டு, நிலத்தடி நீரின் அளவு அதிகரிக்கும்” என்றார்.

நன்றி :
அன்பழகன் முகநூல் பக்கம்

மழை நீரை சேகரியுங்கள்

Exit mobile version