Skip to content

காரிமங்கலம் வாரச்சந்தையில் ரூ.16 கோடிக்கு மாடுகள் விற்பனை

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில், செவ்வாய் தோறும் வாரச்சந்தை நடக்கிறது. நேற்று நடந்த சந்தைக்கு, ஆல்பிளாக், ஜெர்சி, சிந்து, நாட்டு மாடு, எருமை மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

ஆல் பிளாக் ரக மாடு, 55 ஆயிரம் ரூபாய் – 82 ஆயிரம் ரூபாய், ஜெர்சி, 40 ஆயிரம் – 63 ஆயிரம் ரூபாய், சிந்து, 41 ஆயிரம் – 58 ஆயிரம் ரூபாய், நாட்டு மாடு, 48 ஆயிரம் – 82 ஆயிரம் ரூபாய், எருமை மாடு, 20 ஆயிரம் – 44 ஆயிரம் ரூபாய் வரை, விற்பனையானது.

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ‘மொத்தம், 3,400க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனையானதால், 16 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது’ என, வியாபாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

error: Content is protected !!