Site icon Vivasayam | விவசாயம்

களையால் பிரச்னையா? களையை நன்மையா மாற்றுவோமா!

களைத் தொல்லையால் பயிரோட வளர்ச்சி பாதிக்கிறது மட்டுமில்லாமல் களையெடுக்கும் செலவும் கூடும்,
களை என்பது பெரிய தொந்தரவு, ஆனால் அது பயிரையும் பாதிக்காமல் கையையும் கடிக்காமல் எளிமையான முறையில் தடுக்கலாம்.அதாவது இயற்கை மூடாக்கு முறையைபயன்படுத்துனால் களையானது மிக வெகுவாக தடுக்கப்படும் உங்க தோட்டத்திலேயும் அருகாமையில் கிடைக்க்கூடிய மக்கும் தாவர மிச்சங்களை பயன்படுத்தியே இந்த மூடாக்கை உருவாக்கலாம்.
தென்னை ஓலை, கரும்புச் சோகை, முறிந்து விழுந்த மரக்கிளைகள் (இலையுடன் கூடியவை) இவற்றை கொண்டே மூடாக்கை உருவாக்கலாம்.

மூடாக்கு பயன்படுத்துறது மூலமா பல நன்மைகள் கிடைக்கும். களை வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டு வீண் செலவு தவிர்க்கப்படுகிறது.அப்புறம் இந்த மூடாக்கானது தோட்டத்து மண் விரைந்து காய்வதை தடுத்து ஈரப்பதம் வெளியேறிடாமல் காக்குது.இதன் மூலாமா தண்ணீர் செலவு குறையும். அதுமட்டுமில்லாமல் நுண்ணயிர்ப் பெருக்கத்தை ஊக்குவிப்பதோடு சிறு உயரச் செடியிலுள்ள மலர்கள் காய்கள் ஆகியவற்றை பறவைகளின் கண்ணிலிருந்து தப்பிக்கவும் வைக்கும்.
ஒரே மூடாக்கு கிடைக்கும் ஓராயிரம் நன்மைகளை சொல்லிட்டே போகலாம்

Exit mobile version