Skip to content

வாழைக்குக் காப்பீடு!

             தமிழகத்தில் நிலவும் வறட்சி காரணமாக வாழை பயிருக்கும் பயிர்க்காப்பீடு செய்து கொள்ளலாம் என தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது. ஒரு ஏக்கர் வாழைக்கு 2 ஆயிரத்து 120 ரூபாய் கட்டணத்தை விவசாயிகள் செலுத்த வேண்டும். வறட்சி காரணமாக இழப்பு ஏற்பட்டால், ஒரு ஏக்கருக்கு 46 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டுத்தொகை கிடைக்கும். இத்திட்டம் வாழை அதிகம் பயிரிடப்படும் மாவட்டங்களில் வட்டாரம் வாரியாக செயல்படுத்தப்படும். குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் விவசாயிகள் இத்திட்டத்தில் இணைய முடியும்.

தொடர்புக்கு :

வாழை விவசாயிகள் தங்கள் பகுதியிலுள்ள தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகவும்.

Leave a Reply

error: Content is protected !!